உலகின் மிக உயரமான நபரும், உலகின் மிகவும் உயரம் குறைவான பெண்ணும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன.
மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அம்கே உலகின் மிகவும் உயரம் குறைவான பெண்ணாக அறியப்படுபவர். கின்னஸ் உலக சாதனையிலும் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
2 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட இவர், 8 அடி 9 அங்குலம் உயரத்துடன், உலகின் மிகவும் உயரமான நபர் என்ற பெருமை பெற்ற துருக்கியின் சுல்தான் கோசனை புகைப்பட பதிவு நிகழ்ச்சிக்காக சந்தித்தார்.
எகிப்தில் உள்ள கிசா பிரமிடு பகுதியில் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். எகிப்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக
இருவரையும் புகைப்பட பதிவு நிகழ்ச்சிக்கு அழைத்ததாக எகிப்து அரசு தெரிவித்தது. இவர்களது புகைப்படங்களுக்கு வரவேற்பு பெருகி வருகிறது.