வஞ்சகம் நிறைந்த வீரத்தால் தில்லி சுல்தான் ஆகும் அலாவுதீன் கில்ஜி..மாமனையே தன் மனைவியின் எதிரே கொல்லும் கொடூரம்..என படம்தோறும் ஏராளமான குரூரங்களை அரங்கேற்றுகிறான்..போர்க்கள நியதிகளை தவறாது பின்பற்றும் மேவார் ராஜ்ஜியத்தின் ராஜபுத்திர அரசன் ராவல் ரத்தன்சிங்..முத்துக்கள் வாங்க இலங்கைக்கு பயணிக்க..பத்மாவதியின் அம்பினால் காயமாகி..பின்பு பத்மாவதியின் அன்பில் கைதாகி மணமுடித்து..நாடு திரும்புகிறான்..!!!
மேவாரின் ராஜகுரு பத்மாவதியின் அழகு..அறிவில் மயங்கி...அந்தணகுல விதிமீறலில் ஈடுபட..ராணியின் ஆணைப்படி நாடுகடத்தப்படுகிறான்..!! போகும்போதே மேவாரை அழிப்பதாக சபதமிடுகிறான்..எப்படியோ அலாவுதீன் கில்ஜியை சென்றடையும் அந்தணன்..பெண்களென்றாலே போகம் துய்க்க துடிக்கும் காமாந்தகன் கில்ஜியிடம் சேர..பத்மாவதியின் பேரழகைச் சொல்ல..பெண்வெறி தலைக்கேற..மேவாருக்கு செய்தியனுப்புகிறான்..விருந்துக்கு குடும்பத்தோடு கலந்து கொள்ள..ரத்தன்சிங் மறுக்க..படைதிரட்டி போர் பிரகடனம் செய்து..சித்தோடு கோட்டைக்கு வெளியே ஆறுமாதமாக காத்திருக்கிறான்...காமவெறியோடு..
அதற்குப் பின் நிகழ்ந்தவைகளை கற்பனை கலந்த(?) வரலாறோடு சுவைபட சொல்லியிருக்கிறார்கள்..!! கடைசியில் ரஜபுத்திரப் பெண்கள் அனைவரும் தீயில் பாய்வது..ஆண்களுக்கு இணையான நெஞ்சுரம் படைத்தவர்கள் தாம் என்பதை உலகுக்கே உணர்த்துகிறது..!! இதில்..குரூரவாதியாக அலாவுதீனையும்..நயவஞ்சகனாக ராஜகுரு அந்தணனையும்..சிறப்பாக காட்டியிருக்கிறார்கள்..
துரோகி அந்தணனின் தலையை துண்டிப்பது நல்ல திருப்பம்., இதற்காக(அ) இந்தப் படத்துக்காக வட மாநிலங்களில் கலவரம் செய்யுமளவிற்கு ஏதும் இருப்பதாக என்னால் உணர முடியவில்லை..!!