மூலிகை பற்றி அறிந்து கொள்வோம்
நாயுருவி என்னும் மூலிகை பலருக்கும் தெரிந்திருக்கும் . இது
பரவலாக சில இடங்களில் காணப்படுகிறது .இது அபமார்க்கி எனவும் அழைக்கப்படுக்கிறது .
இதன் வேறு பெயர்கள் அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம், காஞ்சரி, கதிரி , மாமுநி , நாய்க்குருவி ஆகியவை
இதன் வேர், விதை, இலை என எல்லா பாகங்களும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது .
இந்த செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வளரும் இயல்புடையது .
நாயுருவியில் இரண்டு வகை உண்டு ஆண்
, பெண்
ஆண் நாயுருவி பச்சை வர்ணத்திலும்
பெண் நாயுருவி சிகப்பு வர்ணத்திலும் இருக்கும் .
நாயுருவி மருத்துவ பயன்கள்
நாயுருவி செடியின் இலைகளை பறித்து வாடும்
முன் நன்றாக இடித்து சாறெடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் சீள் வடிதல் நிற்க்கும்.
நாயுருவி வேர் எடுத்து பல் தேய்த்தால்
பல்லில் உள்ள நுண்கிருமிகள் அழிந்துவிடும். மேலும் பல்கூச்சம் , ஈறுவலி, ஈறு வீக்கம் வராமல் தடுக்கும்
தொடர்ந்து மலச்சிக்கலால் பாதிக்க பட்டவர்களுக்கு
நாயுருவி இலைகளை குடிநீரில் போட்டு குடிக்க கொடுத்தால் மலச்சிக்கல் மாறும்
சிறுநீர் வராமல் பாதிக்கப்பட்டு இருந்தால்
கதிர் விடாத நாயுருவி இலையை எடுத்து இடித்து சாறு பிழிந்து சம அளவில் நீர் கலந்து நன்றாக
காய்ச்சி தினமும் 3 வேளை 3 மி.லி. அளவு 5 நாள் சாப்பிட்டு பால் அருந்தி வர சிறுநீர்
கழியும்.சிறுநீரகம் நன்கு செயல்படும்.
No comments:
Post a Comment