திப்பிலி ஒரு மூலிகை .
திப்பிலி ஒரு கொடி வகையை சார்ந்த நீண்ட கால பயிர் .மிளகு , வெற்றிலையை சார்ந்த இது பைப்பர் லாங்கம் என்ற தாவர பெயரை கொண்டது .
திப்பிலி மலை பிரதேசத்தில் செழித்து வளரும் .
சித்தர்களின் பாடல்களில் திப்பிலிக்கு பல பெயர்கள் உண்டு .
மாகதி , தண்டுலகம் , குன்றம் ,பாளாக்கி, சபலம் , சவுண்டிசியம், முகுபல்லியம் , வையதெக்கம், கோலன் , வாதகுன்ம திரிதோஷ நாசனி , கோழைதனை அறுக்கும் சூதன் ஆகியவை
திப்பிலி காரமான இனிப்பு சுவையும் குளிர்ச்சி தன்மையும் கொண்டது
உடல் வெப்பத்தை அதிகரிக்க செய்யும் .
குடலில் உள்ள வாயுவை போக்க வல்லது .
திப்பிலி பொடி கடுக்காய் பொடி சம அளவு எடுத்து தேனில் குழைத்து காலை மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் குணமாகும் .
திப்பிலி செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர் 3 வருடங்கள் தாண்டிய பிறகு "கண்ட திப்பிலி" என்ற மருந்து பொருளாக மாறுகிறது . விளையாத பூக்கதிர் தண்டை உலர்த்தி "அரிசி திப்பிலி" என்ற மருந்தாக மாற்றப்படுகிறது .
சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்தது மிக சக்தி வாய்ந்த திரிகடுகம் என்னும் மருந்தாகும்.
திப்பிலி நல்ல ஒரு மூலிகை.சிறந்த மூலிகையாக பல சித்த மருந்துகளில் பயன்படுகிறது. இருமலை கட்டுப்படுத்த வல்லது . காச நோய் , தொண்டைக்கட்டு , காய்ச்சல், சளி போன்ற நோய்களையும் குணப்படுத்த வல்லது . மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .
திப்பிலியின் காய்கள் உணவு பொருட்கள் , மருந்துகள் , வாசனை பொருட்கள் , மதுபான வகைகளில் பயன்படுத்தப்படுகிறது
திப்பிலியை பொடியாக்கி சிறிதளவு தேனில் கலந்து தொடர்ந்து இரு வேளை சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு , சளி குணமாகும் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம் .
இளம் சூடான நீரில் திப்பிலி பொடியை கலந்து குழந்தை பெற்ற பெண்களுக்கு கொடுத்தால் இரத்த போக்கு காய்ச்சல் குணமாகும்.
திப்பிலி குடல் புழுவை அகற்றும் வல்லமை கொண்டது .
திப்பிலி வாத நோய்களை குணமாக்கும் வல்லமை கொண்டது .
தேமல் குணமாக அரை தேக்கரண்டி திப்பிலி பொடியுடன் தேன் கலந்து காலை மாலை இரு வேளை ஒரு மாதத்திற்கு சாப்பிட வேண்டும் .
No comments:
Post a Comment