இது ஒரு பூரான் தன் குட்டிகளை ஈனும் மிகவும் அரிதான வீடியோ காட்சி . எண்ணற்ற குஞ்சுகளை தன் வயிற்றிலிருந்து ஒரே நேரத்தில் வெளியே விடுகிறது . குட்டிகள் சுத்தமான வெள்ளை நிறத்தில் இருக்கிறது . மிகவும் அபூர்வமான வீடியோ பார்த்து மகிழுங்கள்
பூரான் (Centipede) என்பது பல கால்களுடன், புழுபோல் நீண்ட, ஆனால் சற்றே தட்டையான உடல் கொண்ட, நெளிந்து ஊரும், கணுக்காலிகள் என்னும் தொகுதியில் பலகாலிகள் என்னும் துணைத் தொகுதியில், உள்ள உயிரினமும் அதன் உயிரின வகுப்பும் ஆகும். இவற்றின் உடல் பல கட்டுகளாக அல்லது பகுதிகளாக, ஒன்றை அடுத்து ஒன்றாக
இணைக்கப்பட்டு, நீளமாக அடுக்கபட்டு அமைந்துள்ளது. இவ்வுடல் அடுக்குகளில் பொதுவாக 7 முதல் 35 கட்டுகள் இருக்கலாம் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் (கட்டுக்கும்) இரண்டு கால்கள் என்னும் விதமாக அமைந்துள்ளன, ஆனால் கடைசி இரண்டு கட்டுகளில் கால்கள் இராது ஏனெனில் கடைசி கட்டு இனப்பெருக்க உறுப்புடையது. எல்லாப் பூரான்களின் உடலிலும் அவற்றின் முதற்பகுதியில் (முதற்கட்டில்) கூரான நச்சு உகிர்கள் உள்ளன. தலையில் இருந்து மிக நீளமான உணர்விழைகள் நீட்டி அசைந்து கொண்டிருக்கும். இவ் உணர்விழைகளும் இணைக்கப்பட்ட பல கட்டுகளாக அமைந்துள்ளன (12-100 கட்டுகள்). ஒவ்வொரு கால்களும்கூட பகுதி-பகுதியாக இணைக்கப்பட்ட அமைப்பு கொண்டிருக்கும். பொதுவாக கால்களில் 7 கட்டுகள் இருக்கும். பெரும்பாலான பூரான் இனங்களில் அவற்றின் கால்களின் நுனியில் கூரான உகிர்கள் இருக்கும்.
பூரான்களின் அறிவியல் பெயர் கைலோப்போடா (Chilopoda, Χειλόποδα). கிரேக்க மொழியில் கைலோஸ் (Χειλός) என்றால் உதடு என்றும், போடோஸ் (ποδός) என்றால் கால் என்றும் பொருள். பூரானின் உடல் அமைப்பில், அதன் முன்கட்டின்(முன் பகுப்பு உடலின்) கால்கள், இரையைப் பற்றி நஞ்சு ஊட்டுவதால், வாயின் தாடை போல் இயங்குகின்றது. எனவே, இதனை தாடைக்காலிகள் என்னும் பொருளில், "foot-jaw",கைலோப்போடா என்று அழைக்கிறார்கள். தமிழில் இதனைத் தாடைக்காலிகள் எனக்கூறலாம். இப்படி ஓர் உயிரின வகுப்பு முழுவதும் இரையைத் தாக்கி உண்ணும் வகையாக இருப்பது அரிது.
உலகில் ஏறத்தாழ 8,000 இனங்கள் உள்ளன தற்பொழுது 3,000 வகைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. உலகில் பூரான்கள் மிகப்பரவலாகக் காணப்படுகின்றன. வடமுனைக்கருகில் ஆர்ட்டிக் வட்டத்தையும் கடந்து இவை காணப்படுகின்றன. இவை மண்ணுலகில் மழைக்காடுகளில் (பொழில்களில்) இருந்து கடும் பாலைவனங்கள் வரை மிகப்பரவலான சூழல்களில் காணப்படுகின்றன. இவை தன் உடலில் இருந்து ஈரப்பதத்தை இழப்பதால், இவை வாழும் இடம் ஈரப்பதம் சூழ்ந்த குறுஞ்சூழலாகவேனும் (microclimate) இருத்தல் வேண்டும். இலைதழை மற்றும் தாவரசிதைபொருளை மாற்றுவதில் பங்குகொள்ளும் முதுகெலும்பில்லா உயிரினங்களில் இவை முதன்மையானவற்றுள் ஒன்றாக உள்ளன.
சில
பூரான் வகைகளின் கடி மாந்தர்களுக்குத் நச்சுத் தீமை உடையது. பூரான்களின் கடி வலி மட்டுமே
தருமாயினும், ஒவ்வாமைத் தன்மை உடைய சிலருக்கும்
குழந்தைகளுக்கும் கூடிய தீமை ஏற்பட வாய்ப்புள்ளது. சிறு பூரான்களால் பொதுவாக மாந்தர்களின்
தோலை துளைத்து கடிக்க இயலாது.
குழந்தைகள்
விளையாடிக்கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போதோ ஏதாவது பூச்சி கடித்து
விடும். கடித்தது எந்த வகை பூச்சி என்பதை குழந்தைகளின் தோலில் ஏற்படும் தடிப்புகளை வைத்தே கண்டறிந்து கொள்ளலாம். பூரான்
எனப்படும் நூறுகாலிகள் கடித்த இடத்தில் தோல் தடித்து சிகப்பு நிறத்தில் காணப்படும்.
குழந்தைகளுக்கு அரிப்பும் எரிச்சலும் இருக்கும் இதை வைத்தே அது பூரான் கடிதான்
என்பதை உறுதி செய்ய முடியும். ஒரு சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும். தலைவலிப்பது போல இருக்கும். வாந்தி ஏற்படும். பூரான்
கடிதானே என்று அலட்சியம் கூடாது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டும்.
அதற்கு முன்னதாக சில முதலுதவி சிகிச்சைகள் செய்யலாம். பூரான் கடித்த இடத்தில் உடனடியாக ஆன்டிசெப்டிக் சோப்
போட்டு நன்றாக கழுவ வேண்டும் இதனால் அரிப்பும் கட்டுப்படும். கடிபட்ட இடத்தில் சூடாக இருக்கும். வலியும் அதிகமாக
இருக்கும். அந்த இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் குளிர்ச்சியாகி வலி கட்டுப்படும். பனை வெல்லம் பூரான் கடித்தது என்று
தெரிந்ததும் குழந்தைகளுக்கு பனைவெல்லத்தை கரைத்து ஒரு சங்கு கொடுக்கலாம். சாப்பிட தெரிந்த குழந்தையாக
இருந்தால் பனைவெல்லாம் தந்து சாப்பிட சொல்லலாம். அதேபோல் அரிக்கும் இடத்தில் ஹைடிரோ கார்டிசோன் கிரீம் தடவ அரிப்பு மறையும்.
தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக சிறிது மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத்
தடிப்புகள் மறையும். அதிக மண்ணெண்ணெயை விட்டால் தோல் பொத்துவிடும் அதனால்
கவனத்துடன் செயல் படவேண்டும்.. குப்பைமேனி இலை வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில்
வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. குப்பைமேனி இலையையும் உப்பையும் சரி அளவாக 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம்
சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும்
செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். ஊமத்தம் இலை பூரான் கடிக்குச் சிகிச்சை
செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி
குளிக்கவேண்டும். ஊமத்தம் செடியின் நூறு கிராம் எடுத்து நன்றாக இடித்து கால்லிட்டர் நல்லெண்ணெயில் ஊற போடவும்.
சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி
போன்ற சில்லரை தொந்தரவும் நீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.
இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும். பூரான்போல் தடிப்பு உண்டாகும். குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விஷம் நீங்கும். சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம். அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம்.விஷம் முறியும்.
இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும். பூரான்போல் தடிப்பு உண்டாகும். குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விஷம் நீங்கும். சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம். அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம்.விஷம் முறியும்.
ஐந்து வகை விஷங்களில் பூரானும் ஒன்று. இதை ஆயிரங்கால்
பூச்சி என்றும் சொல்வதுண்டு. இதன் பக்கவாட்டில் எண்ணற்ற கால்கள் இருக்கும். பூரான் கடிப்பதால் வலி தெரிவதில்லை.
பூரான் கடித்தால் உடம்பெல்லாம் நீண்ட தடிப்புகள் உண்டாகும். சில நாட்களில் நீண்ட
தடிப்புகள் தானாகவே மறைந்துபோகும். ஆனால் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மீண்டும் அந்த தடிப்புகள் தோன்றும்.
No comments:
Post a Comment