சிலருக்கு அவசரமாக அடிக்கடி சிறுநீர் வருவது போன்று இருக்கும்
இந்த நிலையை ஒவ்வொருவரும் தங்களின் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் கண்டிப்பாக அனுபவிப்போம்.
இந்த சூழ்நிலையில் அடிவயிற்றில் எரிச்சலுடன், வலியையும் உணரக்கூடும். சரி, இந்த நிலையை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்கிறீர்களா? ஒரு நாளைக்கு 4-5 முறை சிறுநீர் கழித்தால் பிரச்சனை இல்லை. ஆனால் 8 முறைக்கு மேல் சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அப்போது உடலில் பிரச்சனை இருப்பதாக தெரிந்து கொள்ளலாம்.
சிலருக்கு பிறக்கும் போதே சிறுநீர்ப்பையானது சிறிதாக இருக்கும். அதனால் அத்தகையவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.
ஒரு மணிநேரத்திற்கு இரண்டு முறை சிறுநீர் கழித்தால், அத்தகையவர்களின் உடலில் பிரச்சனைகள் இருக்கிறது என்று அர்த்தம். இருப்பினும், இத்தகைய நிலைமை ஒருவருக்குகொருவர் மாறுபடும். உதாரணமாக, அதிகமாக தண்ணீர் குடித்தால், அடிக்கடி சிறுநீர் வருவதில் பிரச்சனை இல்லை. ஆனால் தண்ணீரே பருகாமல், அடிக்கடி சிறுநீர் வந்தால், அதனை சாதாரணமாக எண்ணாமல், எதற்காக என்று நிச்சயம் ஆராய வேண்டும்.
ஏனெனில் இவ்வாறு அடிக்கடி சிறுநீர் வெளியேறினால், சிலசமயங்களில் உடலில் ஒருசில நோய்கள் இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கும். உதாரணமாக, நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இதுப் போன்று வேறு சில நோய்கள் உடலில் இருந்தாலும், அடிக்கடி சிறுநீரானது வெளியேறும்.
நீரிழிவு நோய் இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஏனெனில் உடலில் அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் இருந்தால், அதனை வெளியேற்றுவதற்கு சிறுநீரகத்தின் செயல்பாடு அதிகமாகி, ஒரு நாளைக்கு 20 முறை சிறுநீர் கழிக்க நேரிடுகிறது.
No comments:
Post a Comment