கொல்லிமலை மாசி பெரியண்ண சுவாமி - சியோ தமிழ்

Breaking

Monday, May 29, 2017

கொல்லிமலை மாசி பெரியண்ண சுவாமி



சன்மார்க்கத்திற்கு வந்தபிறகு தெய்வத்தின் பெயரால் பலி கொடுப்பதும், அதன்பொருட்டு அத்தெய்வங்களும் எனக்கு பிடிக்காமல் போயின. ஆனால் அதெல்லாம் மீறி இரண்டு தெய்வங்கள் எனக்குள் என்னமோ செய்தன.
ஒன்று - கொல்லிமலை கொல்லிபாவை எனும் எட்டுக்கை அம்மன் .
இரண்டு - கொல்லிமலை மாசி பெரியண்ண சுவாமி.
மாசி பெரியண்ண சுவாமி சந்நிதிக்கு சென்றபோது அவ்வளவு நல்ல சக்தியை உணரமுடிந்தது. ஆக்ரோஷமான சக்தி நிலையை அங்கு காண முடியவில்லை. சாத்வீகமான சக்தியே நிறைந்திருந்தது.
பக்கத்தில் சேவலை பலிக்கொடுக்கும் விதமாக சூலாயுதத்தில் சொருகி வைத்திருந்த போதும் துற்நாற்றம் எதுவும் வீசவில்லை.
காவல் தெய்வங்களில் கருப்பண்ண சாமி, பெரியண்ண சாமி, மேலும் பல தெய்வங்களுக்கெல்லாம் ஆதாரம் ஐயனார். அவரே " ஆசிவகம் " என்ற மார்க்கத்தை தோற்றுவித்தார். அதன் கொள்கையின் பின்புலத்தில் இருப்பவர் பரசிவ பீடத்து " வள்ளலார் " .
வள்ளலார் தமது முற்பிறவிகளில் பதஞ்சலிக்கும் வியாக்கிர பாதருக்கும் அருளிய " திரை விளக்க " பிருகேந்திர ஆகம மார்க்கமே பிற்காலத்தில் ஐயனார் மூலம் புத்துணர்ச்சி பெற்றது. அதுவே ஆசிவக மார்க்கமானது. சைவ, வைணவ, சாக்த மார்க்கங்கள் " மீண்டும் தலைதூக்கிய பிறகு ஆசிவக மார்க்கம் அதன் உண்மை தன்மையை இழந்து எல்லை காவலுக்கான தெய்வ வழிபாடாயின.

No comments:

Post a Comment

Pages