சளி பிடிப்பதால் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளில் இருமலும் ஒன்று. சளி போனாலும் இருமல் போகாமல் பாடு படுத்தும்.
இருமலைப் போக்க எளிதான வழி உள்ளது. தூதுவளை இலையை 4 அல்லது 5 எடுத்து அதன் முட்களை நீக்கிவிட்டு கழுவிக் கொள்ளவும்.
இலைக்குள் 4 அல்லது 5 மிளகு வைத்து வெற்றிலைப் போல் மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட இரண்டே நாளில் மார்புச் சளி போய், தொடர்ந்து வந்த குத்தல் இருமலும் காணாமல் போகும்.
தூதுவளையை உளுத்தம் பருப்பு, புளி வைத்து துவையல் செய்தும் சாப்பிடுவார்கள். சளி பிடித்தவர்களுக்கு இந்த துவையலை செய்து கொடுத்தால் எந்த மருந்துக்கும் அசராத சளியும் கரைந்து காணாமல் போய் விடும்.
தூதுவளை இலை உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும் என்பதால், சூட்டு உடம்புக் காரர்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது.
No comments:
Post a Comment