யார் உண்மையான சாமியார் - சியோ தமிழ்

Breaking

Friday, September 15, 2017

யார் உண்மையான சாமியார்



இன்று ஆன்மிகம் என்ற பெயரில் சாமியார்கள் பலர் உருவாகி சாமான்ய மக்களை ஏமாற்றி சொகுசாக வாழ்கின்றனர் .
ஒரு ஊாில் எல்லாம் செல்வமும் பெற்றிருந்த ஒருவா் சன்யாசியாக வீடு மனைவி மக்கள் பெற்றவர்கள் உறவு முறைகள் என அனைத்தையும் துறந்து சொந்த ஊரில் அதுவும் செல்வந்தர் என்று மதிப்பாக வாழ்ந்த ஊரில் வீடு வீடாக சென்று கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து கிடைக்கும் உணவை உண்டு வாழ்ந்து வந்தார்.
ஒரு முறை அவர் வீட்டிற்க்கே அவர் பிச்சை கேட்டு வந்தார் அவரது குரல் கேட்டு வீட்டின் வாசலுக்கு வந்த அவரது தாயார் .
மகனே இன்னும் நீ பணக்காரன் தான் போல என்றார் சிறு புன்னகையோடு பட்டினத்தார் புன்னகையோடு ஏன் தாயே அப்படி சொல்கிறீர்கள் என்றார் அவரது தாயார் உன் சொந்த வீட்டை கூட அந்நியமாக நினைத்து பிச்சை கேட்டு வந்திருக்கும் நீ உன் கையில் ஒரு திருவோடை வைத்து சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கிறாயே ஏன் என்றார் .
இதை கேட்டதும் அந்த சன்யாசி கோபமாக திருவோட்டை எரிய போக அதை தடுத்த அவரது தாயார் மகனே துறவு மேற்கொண்டவர்கள் எதையும் வெறுத்து ஒதுக்க கூடாது .
அதனால் இந்த திருவோடு தானே ஒரு நாள் காணாமல் போகும் அப்போது உன் ஓடு காணவில்லை என்று நினைத்து தேடாமல் அதன் மீது பற்று வைக்காமல் இரு அதுவே சிறந்த துறவிக்கு அடையாளம் என்று கூறி உள்ளே சென்று உணவு கொண்டு வந்து தன் மகனுக்கு அறிவு பிச்சையும் உணவு பிச்சையும் இட்டாள் அந்த தாய் .

No comments:

Post a Comment

Pages