நாவில் எச்சில் ஊறவைக்கும் கறிவேப்பிலை சாதம் - சியோ தமிழ்

Breaking

Friday, September 15, 2017

நாவில் எச்சில் ஊறவைக்கும் கறிவேப்பிலை சாதம்



இதற்க்கு தேவையான பொருட்கள்

உதிரியாக வடித்த சாதம் - 3 கப்,
மிளகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
கறிேவப்பிலை - 1 கப்,
தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 4,
முந்திரிப்பருப்பு - 6,
தாளிக்க கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தேவையான அளவு,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மிளகு, சீரகத்தை தாளித்து, கறிவேப்பிலை, தேங்காய்த்துருவல், காய்ந்தமிளகாய், முந்திரி அனைத்தையும் வறுத்து, ஆறவைத்து பொடித்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் + நெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, ஆறிய சாதத்தில் கொட்டி, அரைத்த கறிவேப்பிலை பொடியையும் தூவி, உப்பு சேர்த்து கிளறி பரிமாறவும்.

No comments:

Post a Comment

Pages