5 மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு - சியோ தமிழ்

Breaking

Sunday, February 25, 2018

5 மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு



1. ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13 ஆம் தேதி 1963 ல் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் பிறந்தார். இவருடைய இயற் பெயர் ஸ்ரீ அம்மா யஞ்சார் ஐயப்பன்.
2. ஸ்ரீதேவியின் அப்பா ஒரு வழக்கறிஞர் மற்றும் அவரது தாய் மொழி தமிழ் . என்ன தான் அவரது அம்மா ராஜேஸ்வரியின் தாய்மொழி தெலுங்கு என்றாலும் அவரது அப்பாவின் தாய் மொழியான தமிழிலேயே பேசி வந்தார் ஸ்ரீதேவி.
3. தனது நான்காவது வயதில் 1967 ல் வெளியான துணைவன் என்ற தமிழ் திரைப்படத்தில் கடவுள் முருகன் கதாபாத்திரத்தில் முதலில் நடித்தார்.
4. ஸ்ரீ தேவி ஹிந்தி ,மலையாளம், தமிழ் , கன்னடம் , தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளிலும் நடித்து பெரும் புகழையடைந்தவர்.

5. இவர் ஹிந்தியில் நடித்த முதல் திரைப்படம் , 1979 ல் வெளியான "சொல்வா சாவன்" .
6. 2013 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி பெருமைப்படுத்தியது.
7. ஜுராசிக் பார்க் படத்தில் நடிக்க கூட இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்கிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. ஆனால், அப்போது பாலிவுட்டில் பயங்கர பிசியாக இருந்ததால் ஜுராசிக் பார்க் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை கைவிட்டார் ஸ்ரீதேவி.
8. ஸ்ரீதேவியின் இரண்டாவது கணவர் தான் போரனே கபூர் . முதல் கணவர் மிதுன் சக்ரபோர்த்தி . மிதுன் சக்ரபோர்த்தியை 1985 ல் திருமணம் செய்த ஸ்ரீதேவி மூன்று வருடங்களிலேயே 1988 ல் விவாகரத்து செய்தார். இவருக்கு தற்போது ஜான்வி மற்றும் குஷி என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
9.இவர் கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் இளைய தளபதி விஜயுடனான 'புலி' அதற்கு முன்னர் இங்கிலிஷ் விங்கிலீஷ். ஹிந்தியில் நடித்த கடைசி திரைப்படம் "மாம்".
10. தனது 54 வது வயதில் மாரடைப்பு காரணமாக துபாயில் நேற்று நள்ளிரவு 11 மணிக்கு
..(24-Feb-2018)உயிரிழந்தார் .

Pages