உங்கள் முடி கொட்டுவது நின்று ஒரே வாரத்தில் முடி கருமையாக வளர இதை செய்யுங்க - சியோ தமிழ்

Breaking

Wednesday, February 28, 2018

உங்கள் முடி கொட்டுவது நின்று ஒரே வாரத்தில் முடி கருமையாக வளர இதை செய்யுங்க



முடி கொட்டுவது பலருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. முடி வேகமாக கொட்டுவது பெண்களின் மனவருத்தத்தை அதிகரிக்கும் . ஆனால் இந்த முடி கொட்டுவதை போக்கி முடி வளர செய்ய ஒரு இயற்கை முறை உள்ளது 
இந்த முறையில் நீங்கள் எண்ணெய் தயாரித்து அதை உங்கள் முடிக்கு பயன்படுத்தும் பொழுது உங்கள் முடி கொட்டுவது நின்று முடி மிக வேகமாக வளரும். ஏனெனில் இந்த பொருட்கள் அனைத்தும் உங்கள் முடிக்கு ஊட்டமளிப்பவை

சின்ன வெங்காயம் ...... ஒன்று ( அரைத்து விழுதாக்கவும் )
செம்பருத்திப் பூ .... மூன்று பூக்கள் ( அரைத்து விழுதாக்கவும் )
மருதாணி இலைகள் .. ஒரு கைப்பிடி ( அரைத்து விழுதாக்கவும்
கறிவேப்பிலை ...... ஒரு கைப்பிடி ( அரைத்து விழுதாக்கவும் )
வெந்தயம் ....... அரை தேக்கரண்டி ( அரைத்து தூளாக்கவும் )
செக்கு நல்லெண்ணெய் .......... நூறு மில்லி


வாணலியை சூடாக்கி அதில் நல்லெண்ணெய் ஊற்றி சிறுதீயில் சூடாக்கி
அத்துடன் சின்ன வெங்காயம்
செம்பருத்திப் பூ
மருதாணி இலைகள்
கறிவேப்பிலை
அரைத்த விழுது போட்டு சிறு தீயில் கொதிக்க வைத்து பாதித் தைலப் பதம் வந்தவுடன்

வெந்தயம் தூள் போட்டுக் காய்ச்சி
தைலப் பதம் வந்தவுடன் இறக்கி வடி கட்டி ஆறவைத்து சேமிக்கவும்
இந்த தைலத்தை நாள்தோறும் தலைக்கு எண்ணெய் போல் தேய்த்து வர
முடி கொட்டுவது நிற்கும்
முடி வளர்ச்சி மேம்படும்
பொடுகு நீங்கும்
இளநரை கட்டுப் படும்
இத்துடன் நாள்தோறும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை ஒரு மண்டலம் சாப்பிட்டு வருவது மேலும் நன்மை பயக்கும்

Pages