சர்க்கரை நோய் இருப்பவர்களாக இருந்தால் குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை பரிசோதித்து அறிந்து கொள்வது நல்லது.
உடலில் சுழன்று வரும் ரத்தத்தில் இருந்து அசுத்தங்களை பிரித்து எடுத்து வெளியேற்றும் கழிவுநீக்க உறுப்பு மட்டுமல்லாமல் உடலின் ரத்த அணுக்களின் உற்பத்தி உள்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு சிறுநீரகங்களே காரணமாகின்றன. தவறான உணவுப்பழக்கங்களால் சிறுநீரகம் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது.
அடிக்கடி சிறுநீர் கழித்தல், அவ்வப்போது ஏற்படும் கால்வீக்கம், ரத்தச்சோகை, பசி மற்றும் எடை குறைதல், சிறுநீரில் ஆல்புமின் மற்றும் கிரியாட்டின் அளவுக்கு அதிகமாக காணப்படுதல் ஆகிய அறிகுறிகள் சிறுநீரகங்களின் பாதிப்பை காட்டுபவை.
பொதுவாக, ஆரோக்கியமான நபர் நாளொன்றுக்கு அருந்தும் நீருக்கு ஏற்ப பகல் வேளையில் சில முறை சிறுநீர் கழிக்கலாம்.
ஆனால், இரவு தூங்கும் போது சிறுநீர் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வகையில் இயற்கையாகவே உடலில் கட்டுப்பாட்டை உருவாக்கிக் கொள்ளும்.
சிறுநீரகம் தொய்வடைந்த நிலையில் இரவு நேரங்களில் சிறுநீர் அடிக்கடி வெளியேறும்.
இது தொடர்ந்து இருந்தால், இது சிறுநீரகத்தின் பலவீனமா அல்லது புரோஸ்டேட் சுரப்பியின் செயல்பாடுகளின் மாறுதலா என்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.
சர்க்கரை நோய் இருப்பவர்களாக இருந்தால் குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை பரிசோதித்து அறிந்து கொள்வது நல்லது.
குறிப்பாக, ஆல்புமின் மற்றும் கிரியாட்டின் அளவு அதிகமாகக்கூடாது. கிரியாட்டின் அளவு 1.5 என்ற அளவுக்கு மேல் காணப்பட்டால் சிறுநீரகம் ஏறக்குறைய 50 சதவீத அளவுக்கு பாதிப்படைந்து விட்டது எனலாம்.
சத்துள்ள காய்கறி உணவுகள், போதிய தூக்கம், அன்றாடம் உடற்பயிற்சி, புகை மற்றும் மது பழக்கங்களை கைவிடுதல், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை ஆகியவை சிறுநீரகம் உள்பட உடலின் அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியத்துடன் செயல்பட வழி வகுக்கும்.