பால்கோவா:
தேவையானவை:பால் - ஒரு லிட்டர்.
சர்க்கரை - 100 கிராம் (அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற அளவு சேர்க்கலாம்).
குங்குமப்பூ - சிறிதளவு. (தேவையென்றால்).
பொறுமை - கடைசி வரை சலிக்காமல் கிண்டிக் கொண்டே இருக்கும் அளவு
தேவையானவை:பால் - ஒரு லிட்டர்.
சர்க்கரை - 100 கிராம் (அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற அளவு சேர்க்கலாம்).
குங்குமப்பூ - சிறிதளவு. (தேவையென்றால்).
பொறுமை - கடைசி வரை சலிக்காமல் கிண்டிக் கொண்டே இருக்கும் அளவு
செய்முறை:
கனமான மற்றும் அகலமான ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
பால் நன்றாக கொதித்தவுடன், அடுப்பை குறைத்து வைத்து, பாலை நன்றாக சுண்ட விடவும்.
இடையிடையே கிளறி விடவும்.
பால் சுண்டி கெட்டியாக வந்தவுடன் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து நன்றாகக் கிளறவும்.
சர்க்கரை கரைந்து கோவா சட்டியில் ஒட்டாமல் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
குறிப்பு:
தேவையென்றால், இறுதியில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
பாலை ஆடை படியாமல் நன்றாகக் கிளறவும். அப்பொழுதுதான் பால்கோவா நன்றாக இருக்கும். இல்லையென்றால், பால்கோவா ஏடு ஏடாக இருக்கும்.