ஏன் குடும்பங்களில் சண்டை வருகிறது என பலருக்கும் தெரிவதில்லை . அதை தெரிந்து கொள்ளவும் பலரும் தயாரில்லை . இதற்கு முதல் காரணம் யாரும் யாருக்கும் விட்டு கொடுக்காமல் இருப்பது. அதிலும் குடும்பத்தில் ஒரு கணவன் விட்டு கொடுத்து செல்லவில்லையென்றால் அங்கு சண்டை மிக எளிதில் வந்து விடும். சண்டை வந்த வீட்டில் சந்தோசம் இருப்பதில்லை . மேலும் ஏதோ ஒரு விஷயத்தில் சண்டை வந்தால் அதை தீர்ப்பதற்கு கணவன் மனைவி இருவரும் முயலாத பட்சத்தில் அது ஒட்டு மொத்தமாக அவர்கள் குடும்பத்தை பாதிக்கும். குடும்பத்தின் தலைவனே விட்டு கொடுத்து குடும்பத்தை அரவணைத்து செல்ல வேண்டும். மனைவியை நீங்கள் நேசித்தால் உங்கள் குடும்பம் ஒரு சொர்கமே. அது நினைத்தவுடன் கிடைக்காது கணவன் கையில் மட்டுமே அது உள்ளது. மேலும் இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்