உங்கள் வீட்டிலுள்ள எலித்தொல்லையை எப்படி போக்கலாம் - சியோ தமிழ்

Breaking

Thursday, March 1, 2018

உங்கள் வீட்டிலுள்ள எலித்தொல்லையை எப்படி போக்கலாம்

வீட்டை என்னதான் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருந்தாலும், பலரது வீட்டில் எலித் தொல்லையால் பெரும் பிரச்சனை ஏற்படுவதுண்டு.

எலிகளின் மீது ஒரு விதமான வெறுப்பு ஏற்படுவதற்கு காரணமே, அவை வீடு மற்றும் தோட்டத்தை நொடி‌ப் பொழுதில் அசிங்கமாக்கிவிடுவதுதான். எலிப் பிரச்சனையின்றி வீடு மற்றும் தோட்டத்தை வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் எனத் தெரிந்துக்கொள்ளுங்கள்.





எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது.
எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்

வீட்டில் ஏதேனும் ஓட்டை இருந்தால், அதனை உடனடியாக சிமென்ட் அல்லது மண் வைத்து அடைத்து விடுங்கள்.
இப்போது விற்கப்படும் எலிகளுக்கான விஷ மருந்துகளை உண்டப்பின் எலிகள் வீட்டுக்குள்ளேயே இறந்துபோவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, இவ்வகை மருந்துகளை உபயோகிக்கும் போது கவனம் தேவை.

இவை அனைத்தயும் விட எளிமையானது. வீட்டில் ஆங்காங்கே நாஃப்தலின் (ரசக‌ற்பூர‌ம்) பால்ஸ் வைப்பதுதான். நாஃப்தலின் பால்ஸ் இருப்பது தெரிந்தா‌ல் எலிகள் அப்பக்கமே வராது.

Pages