குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கறுத்தான் இலை கொண்டு கனமாக அதாவது அதிக அடர்த்தியுடன் பற்று போட, பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் சுகமாக குழந்தை பிறக்கும்.
மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும் கோணங்களில் இறகுள்ள காய்களையும் உடைய ஏறு கொடி. இதன் இலை, வேர் மருத்துவ குணமுடையது.
பெண்களின் கூந்தல் நீண்டு வளர முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இந்த அற்புதத்தை தெரியாமல் கண்டகண்ட ஷாம்புகளை பயன்படுத்துகிறோம்.
இதன் இலையை அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி சூப் போல உணவோடு வாரம் ஒரு உட்கொள்ள மலச்சிக்கல் தீரும். வாயு உடையும்,
இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடம்பு வலி காணாமல் போகும். வேரை ஒரு பிடி நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளையை அப்படியே கால் குவளையாக வரும் வரை காய்ச்சி, காலையிலும்,மாலையிலும் 21 நாட்கள் சாப்பிட்டு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் 21 நாட்கள் சாப்பிட மூலம் தீரும்..