நீங்கள் கோவில் கருவரைக்கு செல்லும் போது மாமிசம் சாப்பிடக் கூடாது மேலும் சில விஷயங்களை இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் - சியோ தமிழ்

Breaking

Sunday, March 25, 2018

நீங்கள் கோவில் கருவரைக்கு செல்லும் போது மாமிசம் சாப்பிடக் கூடாது மேலும் சில விஷயங்களை இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்



நீங்கள் கோவில் கருவரைக்கு செல்ல வேண்டும் என்றால் மாமிசம் சாப்பிட கூடாது. மாமிசம் சாப்பிடும் பிறர் வீட்டில் நீர் அருந்த கூடாது. இந்த விதிமுறை கடைபிடிக்கும் எவரும் பூணூல் அணியலாம். வீர சைவர் சைவம் என்று சொல்லிவிட்டு மாட்டுகறி ஆட்டு கறியும் சாப்பிடுவார்கள். ஆனால் கோவில் கருவரைக்கு செல்ல அடம் பிடிப்பார்கள். தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில் ஏன் காப்பு கட்டுகிறீர்கள். மது மாமிசம் சாப்பிடாமல் திருவிழா முடியும் வரை சுத்தபத்தமாக ஏன் இருக்கிறீர்கள். உங்கள் குலதெய்வ கோவிலில் ஒருவர் மது மாமிசம் சாப்பிட்டுவிட்டு சாமியை தொட்டு தூக்க அனுமதிப்பீர்களா. கருப்பசாமி அய்யணார் கும்பிடுபவர்கள் கூட ஆட்டு பழி கொடுத்து சாமி வணங்கிய பின் தானே மாமிசம் சாப்பிடுகிறார்கள் கோவில் பூசாரி மது அருந்திவிட்டு மாமிசம் உண்ட பின் கோவிலுக்குள் செல்வாரா. எல்லா பூஜையும் முடித்து தானே கோவில் நடை சாத்திய பின் தான் பூசாரி அவர் பூஜையை ஆரம்பிப்பார்

 காரணம் அதற்கான ஐதீகம் ஆச்சாரம். என்ற கோவில் கருவரை தூய்மை காக்கபட வேண்டும். அதனால் கோவில் கருவரைக்குள் செல்ல நினைப்பவர்கள் வாழ் நாள் முழுதும் மது மாமிசம் சாப்பிடாமல் அனைவரும் திராவிட ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைவரும் அர்ச்சகராகலாம் சட்டபடி திருவண்ணாமலை போன்ற அங்கிகரிக்கப்பட்ட கோவிலில் வேதம் படித்து அர்ச்சகராகி பிறகு நீங்கள் தமிழில் பூஜை செய்தாலும் சமஸ்கிருதம் இந்தி இங்கிலீஷ் என எந்த மொழியில் வேண்டுமானாலும் அர்ச்சனை செய்யுங்கள் யாரும் தடுக்க மாட்டார்கள். ஆட்டுகறி தின்று விட்டு கோவில் கருவரைக்கு விட சொல்லி வழக்காடுவோம் ஆனால் தெருவில் திரியும் பரதேசியை வீட்டு பூஜை அறையில் அழைத்துக்கொண்டு பூஜை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். அதுவும் சமத்துவம் தானே. அதே போல் ஊர் ஊராய் சென்று மதப்பிரச்சாரம் செய்பவர்கள் தெருவில் திரியும் பிச்சைகாரர்களை மதமாற்றம் செய்து அவர்களுக்கு அதே ஒரு லட்சம் இரண்டு லட்சம் பணத்தை தந்து மதமாற்றம் செய்தால் நாட்டில் வறுமை ஒழிகிறதோ இல்லையோ பிச்சைகாரர்கள் இருந்திருக்க மாட்டார்கள். உறவுகள் இருந்தும் இல்லாமலும் கைவிடபட்ட மக்களை ஆதரிக்காத நீங்கள் தான் சமத்துவத்தை பற்றி வாய் கிழிய பேசுகிறீர்கள். ஆனால் எந்த சமத்துவத்தையும் அதற்கான வழிமுறையையும் செய்ய மாட்டீர்கள். ஆனால் கடைசிவரை பிராமணியம் என வரலாற்றில் நடந்த பழைய பஞ்சாங்கத்தையே பேசிக்கொண்டு இருப்பீர்கள். இன்னும் ஒரு கோடி ஆண்டுகள் ஆனாலும் ராமாயணம் சர்ச்சை ஓயாது என்று தெரிந்தும் அதையே பேசிக்கொண்டு இருக்கிறோம். உருப்படியான நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள் சரி செய்யலாம். அதை விட்டுவிட்டு சாதி மதம் என்று வெட்டி அரசியல் பேசுகிறோம். சாதி சான்றிதழ் சாதிகளின் பெயரை பகிரங்கமாக பயன்படுத்தும் வரை எந்த சாதியும் ஒழியாது.

Pages