பல நோய்களை குணப்படுத்தும் வெற்றிலையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம் - சியோ தமிழ்

Breaking

Wednesday, March 28, 2018

பல நோய்களை குணப்படுத்தும் வெற்றிலையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்






🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. வெற்றிலை பல நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. வெற்றிலையை பயன்படுத்தும் முறையில்தான் வெற்றிலையின் முழுமையான பலன்களை பெற முடியும். இப்போது வெற்றிலையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

*தலைவலி 

🍃 வெற்றிலையை கசக்கி சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பு+ரத்தை சேர்த்துக் குழப்பி தலை வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

*தேள் விஷம் 

🍃 இரண்டு வெற்றிலையை எடுத்து, அதில் ஒன்பது மிளகை வைத்து மடித்து, வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி, அதனுடன் தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று சாப்பிட்டால் தேள் விஷம் உடனே முறியும்.

*மூச்சுத் திணறல் 

🍃 வெற்றிலைச்சாறு குடித்து வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் ஆகியவை குணமாகும்.

*நுரையீரல் பலப்பட 

🍃 நுரையீரல் பலப்பட வெற்றிலைச்சாறுடன் இஞ்சி சாறு கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நெருங்காது.

*சொறி சிரங்கு 

🍃 தேங்காய் எண்ணெயில் வெற்றிலையை போட்டு சு+டாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி ஆற வைத்து சொறி, சிரங்கு, படை உள்ள இடங்களில் தடவி வந்தால், எளிதில் குணமாகும்.

*அஜீரணக் கோளாறுகள் 

🍃 வெற்றிலைச்சாறுடன் மிளகு சேர்த்து காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர்களுக்கு உண்டாகும் அஜீரணக் கோளாறு நீங்கும்.

🍃 வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

Pages