சுவையான கோதுமை அல்வா செய்யும் முறையினை பாருங்கள், ருசியாக இருக்கும் அனைவரும் சாப்பிடலாம் - சியோ தமிழ்

Breaking

Friday, March 23, 2018

சுவையான கோதுமை அல்வா செய்யும் முறையினை பாருங்கள், ருசியாக இருக்கும் அனைவரும் சாப்பிடலாம்



கோதுமை அல்வா


தேவையானவை:
கோதுமை - 2 கப்,
பாதாம் பருப்பு - 100 கிராம், முந்திரி - 100 கிராம் (நெய்யில் சிவக்க வறுத்து ஒன்றிரண்டாக உடைக்கவும்), 
நெய் - 2 கப்,
சர்க்கரை - 5 கப்,
குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - சிறிதளவு, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை.
செய்முறை:
கோதுமையை முதல் நாள் ஊறவைத்து, மறுநாள் காலை கிரைண்டரில் நைஸாக அரைத்து பால் எடுக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு 3 முறை பால் எடுக்கவும்.

பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து, தோலெடுத்து, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். கோதுமைப் பாலில் தெளிந்த நீரை இறுத்துவிடவும்.
அடிகனமான வாணலியில் ஒன்றரை கப் நீர் விட்டு, சர்க்கரை சேர்த்து கெட்டிக் கம்பிப் பாகாகக் காய்ச்சவும். அரைத்த பாதாம் பருப்பைக் கோதுமைப் பாலுடன் சேர்த்து, வாணலியிலுள்ள சர்க்கரைப் பாகில் ஊற்றிக் கிளறவும். கொஞ்சம் கெட்டியானதும் குங்குமப்பூ, கேசரி பவுடர் சேர்த்து கரைத்து விட்டு, நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறவும். நெய் தனியே பிரிந்து சுருண்டு வரும் சமயம் முந்திரி, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.இப்போது சுவையான கோதுமை அல்வா தயார் . சுடசுட சுவையாக பரிமாறலாம். 

Pages