உணவே மருந்து! வெந்தய கீரை எவ்வகையில் எல்லாம் மருந்தாக பயன்படுகிறது என்று பார்ப்போமா - சியோ தமிழ்

Breaking

Friday, March 30, 2018

உணவே மருந்து! வெந்தய கீரை எவ்வகையில் எல்லாம் மருந்தாக பயன்படுகிறது என்று பார்ப்போமா

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
இன்றைய மருத்துவ சிந்தனை
வெந்தயக் கீரை
பேன் , பொடுகு நீங்கி முடி கருகருவென வளர
----------------------------------------------------
வெந்தயக் கீரையை அரைத்து நல்லெண்ணெய்யில் கலந்து காய்ச்சி தைல பதத்தில் இறக்கி , தலையில் தேய்த்து வந்தால் பேன் , பொடுகுத் தொல்லை தீரும். முடியும் கருகருவென்று நன்கு செழித்து வளரும்.

இருமல் குணமாக
-----------------------------------------------------
வெந்தயக் கீரை (ஒரு கைப்பிடி) , உலர்ந்த திராட்சை (10), சீரகம் (2ஸ்பூன்)
ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
வீக்கம் மற்றும் தீக்காயங்கள் குணமாக
-----------------------------------------------------
வெந்தயக் கீரையை அரைத்துப் பற்றுப் போட்டால் வீக்கம் மற்றும் தீக்காயங்கள் குணமாகும்.
குடல்புண் குணமா
-----------------------------------------------------

வெந்தயக் கீரை (ஒரு கைப்பிடி) , உளுந்தை (சிறிதளவு) தட்டிப் போட்டு தண்ணீர் ஊற்றி கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் குடல்புண் குணமாகும்.
உடல் சூடு குறைய
----------------------------------------------------
வெந்தயக் கீரை (ஒரு கைப்பிடி) ,பூண்டு , உப்பு இரண்டையும் சிறிதளவு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.
இரத்தம் தூய்மையாக
-----------------------------------------------------
வெந்தயக் கீரை (சிறிதளவு) ,வாழைப்பூ (சிறிதளவு) , மிளகு (5) மூன்றையும் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் ரத்தம் தூய்மையாகும்.
நீர்க்கடுப்பு குணமாக
-----------------------------------------------------
வெந்தயக் கீரை (சிறிதளவு) , சீரகம் (சிறிதளவு) சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.

காம உணர்வு அதிகரிக்க
-----------------------------------------------------
வெந்தயக் கீரை (2 கைப்பிடி ) ,குடை மிளகாய் (3) ,கசகசா ( 1 டீஸ்பூன்),
பூண்டு(3 பல்) ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் காம உணர்வு அதிகரிக்கும்.

Pages