மூன்று தவளைகள்.
மொத்தம் மூணு தவளைங்க ஒரு மலைக்கு மேல இருந்த கோயிலுக்கு போக முடிவு பண்ணுச்சாம. ஒரு மலைக்கு முன்னால் மூன்றும் ஒன்று கூடியதாம். பாம்பு, மிருகங்கள்னு பல ஆபத்துகள் நிறைந்த மலை அது. அதுவும் இல்லாம, தவளைங்க மலைக்கு மேல போக விடாம சில சக்திகளும் தடுக்க நினைச்சுதாம்.
முதல்ல ஒரு தவளை மேல ஏற போச்சு. பின்னால இருந்து போகாத போகாதன்னு ஒரு குரல். அதையும் கண்டுக்காம மலையேறின தவளைக்கு அடுத்த குரல் கேட்டுச்சு. “உன் பின்னால ஒரு பாம்பு படமெடுக்குது பார்”ன்னு கேட்டதும் தவலை திரும்ப வந்துடுச்சு.
அடுத்து ரெண்டாவது தவளை. அதே குரல், ஆனா தவளை கண்டுக்கல. ஆனாலும் அடுத்தடுத்து ஆபத்துகளை அந்த குரல் சொல்லிட்டே இருந்துச்சு. ஒரு கட்டத்துல அந்த தவளையும் திரும்ப வந்துடுச்சு.
இப்போ மூணாவது தவளை ஏறுச்சாம். எந்த குரலுக்குமே தவளை ரியாக்ட் பண்ணல. குரலும் நிக்கல. தவளை மலை ஏறிட்டே இருந்துச்சாம். உச்சிக்கு போய் கோயிலுக்குள்ள போய்தான் நின்னுச்சாம்.
அதை சாதிச்ச தவளைக்கு ஒரே ஒரு வித்தியாசம் தான். அந்த தவளைக்கு காது கேட்காது. எந்த பயமுறுத்தலும் அதோட காதுல விழல. அதோட லட்சியம் மட்டும்தான் மனசுல இருந்துச்சு. அதனாலதான் சாதிக்க முடிஞ்சது.
நாமளும் அப்படித்தான். எடுத்த காரியத்தை மட்டும் மனசுல வசிச்க்கிட்டு, வேண்டாத விஷயங்களை நம்ம காதுல போட்டுக்கவே கூடாது. பயந்தா ஜெயிக்கிறது எப்படி....?!!