சிவனும் பெருமாளும் ஒன்றுதான். சைவமும் வைணமும் ஒன்றுதான். இதைத்தான் " சிவனும் அரியும் ஒன்று; இதை அறியாமல் பேசுபவர் வாயில் மண்" என்பர். சிவனின் இன்னொரு அவதாரம்தான் பெருமாள்.
இனி இந்த ஆலயங்களில் பிரசாதமாக வழங்கப்படும் விபூதியும் தீர்த்தமும் பற்றிய
விளக்கம்
பெருமாள் ஆலயங்களில் தீர்த்தம்
வாழ்க்கையில் உயிர்த் தன்மைகளைக் காட்டுவது வைணவம்.நீர் இல்லை என்றால் உலகம் இல்லை என்பதைக் காட்டுவதற்கு (நீரின்றி அமையாது உலகு)ஆதாரமாக உள்ள நீரைத் தீர்த்தமாக பிரசாதமாகக் பெருமாள் ஆலயங்களில் வழங்கப்படுகிறது.

சைவம் வாழ்க்கையின் நிலையாமை எல்லையை தொட்டுக் காட்டுகிறது. எவ்வளவுசம்பாதித்தாலும் ,எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் உலகத்தின் சக்கரவர்த்தி ஆனாலும் கடைசியில் ஒன்றும் கொண்டு போவது இல்லை. உலகத்தையே வென்ற அலெக்சாண்டர் தான் இறந்த பிறகு தன்னை அடக்கம் செய்யும் சவப்பெட்டியின் மேலே தனது இரு கரங்களும் மக்களுக்கு தெரியுமாறு அமைக்க கட்டளையிட்டான். இது எதைக் குறிக்கிறது என்றால் உலகையே வென்ற தன்னாலும் கடைசியில் எதையும் எடுத்துக்கொண்டு போக இயலாது தனது கைகளில் ஏதும் கிடையாது என்பதை உணர்த்தத்தான் தான் இறந்தவுடன் தனது இரு கரங்களையும் சவப் பெட்டிக்கு வெளியே தெரியுமாறு இருக்கச் செய்தான் என்கிறது வரலாறு.
எனவே வாழ்க்கையில் மிஞ்சுவது ஒன்றும் கிடையாது. ஆகவே "தான் தனது நான் எனது" என்ற ஆணவத்தை ஒழித்து கடைசியில் மிஞ்சப்போவது சாம்பல்தான் என்கிற நிலை யாமையை உணர்த்தவே சிவாலயங்களில் விபூதி பிரசாதமாக வழங்கப் படுகிறது. எனவே ஈசன் நமக்களித்த வாழ்க்கையை யாருக்கும் துன்பம் தராத வாறு ஈசனின் நாமமான "ஓம் நமச்சிவாய" என்று அவன்தாள் பணிவோம்.
ஒம் நமசிவாய

ஒம் நமசிவாய