ஊளைச்சதை குறைந்து, உடல் பொலிவோடு திகழ இந்த ரசத்தினை செய்து குடித்து பாருங்கள் - சியோ தமிழ்

Breaking

Friday, March 2, 2018

ஊளைச்சதை குறைந்து, உடல் பொலிவோடு திகழ இந்த ரசத்தினை செய்து குடித்து பாருங்கள்

ஊளைச்சதை குறைய ; 

தேவையானவை:
கொள்ளு – அரை கப்,
சுக்கு – 10 கிராம்,
மிளகு – 10 கிராம்,
திப்பிலி – 5 கிராம் (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்),
புளி – நெல்லிக்காய் அளவு,


உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்.
தாளிக்க: எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்.
செய்முறை:ஒரு டம்ளர் தண்ணீரில் கொள்ளைப் போட்டு, 5 நிமிடம் கொள்ளு வெந்ததும் அந்தத் தண்ணீரை வடித்துவைத்துக் கொள்ளவும். திப்பிலியை வெறும் வாணலியில் வறுத்து, சுக்கு, மிளகுடன் சேர்த்து மிக்ஸியில் ‘கரகர’ப்பாகப் பொடிக்கவும். புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு (கரைக்கக் கூடாது), அத்துடன் உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்ததும், தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுக்கவும். புளி கொதித்த தண்ணீரையும் கொள்ளு வேகவைத்த தண்ணீரையும் கலந்து, அதோடு தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்க்கவும். பொடித்து வைத்திருக்கும் பொடியைப் போட்டு, 2 நிமிடம் கொதிக்க விடவும் (அதற்கு மேல் கொதித்தால் சுவை மாறிவிடும்). எண்ணெயில் கடுகு, சீரகம் தாளிக்கவும்.

Pages