🌟 சித்ரா பௌர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து பூஜையறையில் விநாயகர் படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும்.
🌟 அவ்வாறு எழுதும்போது சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். அன்று உப்பில்லாத உணவுகளையே (கனிகள்) உண்ண வேண்டும்.
🌟 மாலையில் பௌர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண் பொங்கலை படைக்க வேண்டும்.
🌟 மேலும், அன்றைய தினம் வைக்கும் குழம்பில் கூட, தட்டைப்பயிறும், மாங்காயும் சேர்த்து வைப்பது வழக்கம். ஜவ்வரிசிப் பாயசம் வைத்து அப்பளம் வைத்து, பூஜை அறையின் நடுவில் கோலமிட்டு, அதன் மேல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, சங்கு ஊதி வழிபடுவது அவசியமாகும். பௌர்ணமி விரதம் இருப்பவர்கள், விரதத்தைத் தொடங்க வேண்டிய நாள் சித்ரா பௌர்ணமி தான். விரதத்தை முழுமையாகக் கடைபிடிப்பவர்கள் இரவு நிலவு பார்த்த பின் உணவு அருந்த வேண்டும்.
🌟 தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு கொடுக்கலாம். அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது.
🌟 சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மேலும், மன அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
🌟 மேலும், சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அன்னதானம் செய்தால் கல்வி, வேலை, பதவி, அரசியல், ஆரோக்கியம், திருமணம், வழக்கு மற்றும் குடும்பப் பிரச்சனைகள் நீங்கி மேன்மை உண்டாகும். எனவே, வருகின்ற சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து இறைவன் அருளைப் பெறுங்கள்.
😁😁😁😁