கொடுக்காய் புளியின் மருத்துவ குணங்கள் - சியோ தமிழ்

Breaking

Monday, April 30, 2018

கொடுக்காய் புளியின் மருத்துவ குணங்கள்



தற்காலத்தில் மருத்துவ குணமிக்கது என புகழப்படும் கொடுக்காபுளி, ஆப்பிளின் சற்றே புளிப்பான இனிப்புச் சுவையைக் கொண்டிருந்ததால், கிராமத்து சிறுவர்களின் ஆப்பிளாக கருதப்பட்டது
கிராமப்புறங்களில், நகரங்களில் எங்கும் காணக் கிடைக்கும். ஓசியில் கிடைக்கும் அவற்றை, சிறுவர்கள் கொத்துக்கொத்தாகப் பறித்து கால் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். அதன் வித்தியாசமான புளிப்பு கூடிய இனிப்பு சுவையில், லயித்து மகிழ்வதும், பழைய நினைவுகளாகிவிட்டன. மரத்தில் சிவந்த நிறத்தில் காணப்படும் பழுத்த கொடுக்காப்புளிகளே சாப்பிட அதிக சுவையுடன் இருக்கும்.
எனினும் பழங்களை அணில்கள், பறவைகள் வேட்டையாடி விடும் என்பதால் காய்கள் சற்றே நிறம் மாறும்போதே நம் ஆட்கள் அதை பறித்து வைத்துக்கொள்வார்கள். செங்காயாக இருக்கும் அவற்றின் சுவையும் அருமையாகவே இருக்கும். எனவே, கண்களால் கண்ட போதே சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையென்றால் பறவைகள் அல்லது வேறு யாரேனும் சிறுவர்கள் பறித்துவிடுவர் என்பதால் பையன்கள் உடனே அவற்றைக் கொய்துவிடுவர். புளியை உணவில் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் 
இப்போது அரிதாகக்கடைகளில் கிடைக்கிறது. காசில்லாமல் கொத்துகொத்தாக பறித்து தின்ற அவையெல்லாம் இன்று விலையிட்டு பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுகின்றன. பழைய நினைவுகளால் அன்றைய சிறுவர்களும் இன்று அறிந்த அவற்றின் மருத்துவ குணங்களால், மற்றோரும் வாங்குகின்றனர். கொடுக்காபுளி சர்க்கரை நோயைப் போக்குவதாக சொல்லப்பட, அநேகர் குவியல் குவியலாக வாங்கிச்செல்கின்றனர். இப்போது கொடுக்காபுளியின் மற்ற மருத்துவ குணங்கள் பார்க்கலாம்.
மருத்துவ குணங்கள் :
* வாத நோய் மற்றும் மூட்டு வலி தீர, வலி மருந்தாகிறது.
* நெடுநாள் நோய்வாய்ப்பட்டு உடல் தேறியவர்களுக்கு, உடல்சூட்டினால் ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடுக்கிறது.
* ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
* பெண்களின் கருப்பை நோய்களுக்கும், உள் உறுப்பு புண்களுக்கும் மற்றும் குடல் நோய்களுக்கும் தீர்வாகிறது.
* உடல் எடையைக் குறைக்கும் தன்மையுடையது.
மற்ற உபயோகங்கள் :
கொடுக்காபுளி விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணையிலிருந்து, சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் புண்ணாக்கு மற்றும் இலைகள் ஆடுமாடுகளுக்கு தீவனமாகப் பயனாகிறது. கொடுக்காபுளி மரத்தில் இருந்து, மரச்சாமான்கள் செய்யப்படுகின்றன.

Pages