என் அன்புக் குழந்தையே...
ஏற்கனவே என்ன நடந்த்தோ, என்ன நடக்கப் போகிறதோ அதற்கேற்றவாறு வாழ்க்கை நடத்து. .
எது பிராப்தம் என்று விதிக்கப்பட்டு இருக்கிறதோ அதை அறிந்துகொண்டு நட.
எப்போதும் திருப்தியுடன் இரு,. சஞ்சலத்திற்கோ, கவலைக்கோ இடம் கொடுக்காதே.
ஆனாலும் சில சமயம் என்னையும் மீறிய பிரச்சனைகள் வரும்போது,
என் மனம் என்னையறியாமல் சஞ்சலத்திற்கு உள்ளாகி கவலைபட வைக்கிறது என்கிறாயே.
இந்த மானிட பிறவிகள் தங்களை சுதந்திரமானவர்கள் என நினைத்துகொண்டு சுகத்திற்காக இரவு பகலாக உழைக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் கஷ்டம் என்ற ஒன்றை மட்டுமே அறுவடை செய்கிறார்கள். இதுதான் விதி.
இந்த விதியானது நல்லதாக திரும்பி நல்ல நேரம் வருவதற்கு முன்பு,
ஒரு கஷ்டம் உன்னை இப்படி ஆட்டிவிட்டுச் செல்வது தவிர்க்க முடியாத ஒன்று.
எதிரிகளிடம் சிக்கி அனைத்தையும் இழப்பது, வம்பு வழக்கு என்று அலைவது,
நீடித்த புகழ் நிலை மாறி அனைவரும் புறக்கணிக்கும் வகையில் அவமானம் உண்டாவது போன்ற நிலைகள் தோன்றுவது இதனால் தான்.
கடவுள் தன் பக்தனுக்கு இத்தகைய நிலைகள் வரக்கூடாது என்பதற்காக அவனுக்கு கடனாக, சிறிய ஏமாற்றமாக மாற்றி அமைக்கிறான்.
விதியின் பிடி உன்னை இறுக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன்.
அவசியம் என்றால் விதியையே மாற்றுவேன்.
எப்போதும் உன்னுடன் இருப்பேன்..
ஓம் ஸ்ரீ சாய் ராம்....
No comments:
Post a Comment