புழுவெட்டு என்பது வட்டவட்டமாக முடியினை உத்திர செய்வதாகும். இந்நோய் தலைமுடி, மீசை, தாடி மற்றும் புருவமுடிகளைக் கூட தாக்கும் இயல்புடையது.
தேவையானவை;
மிளகு - 2
சிறிய வெங்காயம் - 2
கல்லுப்பு - ஒரு சிட்டிகை
மருத்துவமுறை;
மிளகு, வெங்காயம்,கல்லுப்பு இந்த மூன்றினையும் அம்மியில் அரைத்து எடுக்க வேண்டும்.இதனை புழுவெட்டு உள்ள இடத்தில் தடவ வேண்டும்.
தொடர்ந்து 2 வாரங்கள் தேய்த்து வர, வழுவழுவென இருந்த தோல் சொரசொரப்பாக மாறும்.இந்நிலையில் ஒருநாள் நிறுத்திவிட்டு மறுநாள் முதல் மீண்டும் பூசவும்.
முடி முளைக்கும் வரை கலவையை பூசுவதும் சொரசொரப்பு வந்தவுடன் நிறுத்திப் பின் மறுநாள் பூசுவதையும் தொடரவேண்டும். ஐந்தாறு நாட்களில் முடி முளைக்கத் தொடங்கும்.
No comments:
Post a Comment