Parisuthar Kootam Naduvil Tamil Christian Songs - சியோ தமிழ்

Breaking

Monday, April 20, 2015

Parisuthar Kootam Naduvil Tamil Christian Songs


Parisuthar Kootam Naduvil Tamil Christian Songs by homejob35

பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ

1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?
கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?
பொல்லாதோர் கூட செய்திடார்
நற்பிதா நலம் அருள்வார்
2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
பாவி நீசப்பாவி நானையா
தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ?
3.பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள்ளலங்கோலத்தை
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
4.துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
என் ஜீவன் எல்லையெங்கிலும்
பரிசுத்தம் என எழுதும்


No comments:

Post a Comment

Pages