தென்னிந்திய சமையலில் தாளிப்பதில் முக்கிய பங்காற்றுவது கடுகு. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. சுமார் 5000 ஆண்டுகளுக்குமுன்பே கடுகின் பயன்பாடு இருந்து வந்துள்ளது. இது ஒரு மருத்துவ மூலிகையாகும். கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு,நாய்கடுகு,மலைக்கடுகு,சிறுகடுகு என பல்வேறு வகைகள் உள்ளன. நமது இந்திய சமையலில் கடுகை எண்ணையில் பொரித்து பயன்படுகிறார்கள். ஆனால் மேலை நாடுகளில் கடுகை பொடியாக அரைத்தோ அல்லது அரைத்த விழுதாகவோ பயன்படுத்துகிறார்கள்.
கடுகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. மேலும் உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொண்டுள்ளது. கடுகு விதைகளில் சினிகிரின்,மைரோசின்,எருசிக்,ஈகோசெனோக் ,ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்கள் நிறைந்துள்ளது. கடுகில் கலோரி அதிகம் உள்ளது 100 கிராம் கடுகு 508 கலோரி ஆற்றலை கொண்டுள்ளது.
எளிதில் வளர்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்தும் உள்ளது
போலேட்ஸ்,நியாசின்,தயமின், ரிபோபிளேவின் ,பைரிடாக்சின், பேன்டோதெனிக் அமிலம் போன்ற பி காம்பிளக்ஸ் விட்டமின்கள் உள்ளன. நொதிகளின் செயல்பாடு நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்க கூடியது
நியாசின் இரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும்
கால்சியம் , மாங்கனீஸ்,தாமிரம் , இரும்பு,செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது
கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும் மாங்கனீஸ் சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகவும் தாமிரம் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் இரும்பு இரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கிறது
கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது
கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது. தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து உட்கொள்ள வேண்டும் பின்னர் ஒருடம்ளர் வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.
மூட்டுவலி நீங்கும். அடிபட்டு ரத்தம் ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்றுபோட ரத்தக்கட்டு மறையும்
கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்பட்டால் கடுகு பற்று நிவாரணம் தரும். கை, கால்களில் சில்லிட்டு விரைத்து போனால் அந்த இடங்களில் கடுகை அரைத்து பற்று போட வெப்பம் உண்டாகி இயல்பு நிலை ஏற்படும்.
ஆஸ்துமா, தலைவலி நீங்கும். தேனில் கடுகை அரைத்து கொடுக்க ஆஸ்துமா, கபம் குணமடையும் 1/2 தேக்கரண்டி கடுகு பொடியுடன் தேன் கலந்து காலை மாலை என இரண்டு நாள்கள் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமடையும்
கடுகு,மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுக்கள் விட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்
கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் கடுக்கிற்கு உண்டு மேலும் இது உடல் பருமனையும் குறைக்கும் கடுகு விதையில் இருந்து எடுக்கும் கடுகு எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது இதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது
No comments:
Post a Comment