முதுமையை விரட்டும் என்றும் இளமையாக வைக்கும் நெல்லிக்காயின் மருத்துவ பயன்கள் - சியோ தமிழ்

Breaking

Sunday, September 4, 2016

முதுமையை விரட்டும் என்றும் இளமையாக வைக்கும் நெல்லிக்காயின் மருத்துவ பயன்கள்





நமது உடலை இளமையாக வைக்கும்  நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சியின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய் நெல்லிகாய் நமது முன்னோர்களால் நெல்லிக்கனி என அழைக்கப்பட்டது. 108 காய கல்ப மூலிகைகளில் ஒன்று நெல்லிக்காய்
செழிப்பான கறுப்பான தலைமுடியை வளர்த்துக் காப்பதிலிருந்து மூளை, கண், காது, மூக்கு, தோல், பற்கள், ஈறுகள், தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல், இதயம், இதயநாளங்கள். கல்லீரல், கணையம், மண்ணீரல், சிறுகுடல், பெருங்குடல், கருப்பை, சிறுநீரகம், மூட்டுக்கள், பாதங்கள் வரை அனைத்து உறுப்புகளின் திசுக்களையும் வளர்த்து அவை சீராகச் செயல்படத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் கொண்டுள்ள ஒரே கனி, நெல்லிக்கனி.
நெல்லிக்காயில் அதிக அளவு சத்துக்கள் அடங்கியுள்ளது .இதில்  புரதம்,கொழுப்பு ,தாது உப்புக்கள்,நார்ச்சத்து ,மாவுச்சத்து ,சுண்ணாம்பு சத்து,பாஸ்பரஸ்,இரும்பு சத்து  ,வைட்டமின் பி
வைட்டமின் சி’, நிகோடினிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது
கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. மனிதனுடைய ஈரல் இந்த கொழுப்புச் சத்திற்கு அடிப்படையாக அமைவது. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகிவிடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சிஇரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் அதிகப்படியான  கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்துவிடும். மாரடைப்பைத் தவிர்க்கலாம்.





No comments:

Post a Comment

Pages