Avocado high in good fats
Nalla koluppukal athigam ulla avocado
மெக்ஸிகோ நாட்டை பிறப்பிடமாக கொண்டாலும் எல்லா இடங்களிலும் காணபடுகிறது. நம் தமிழ் நாட்டில் கூட மலை பிரதேசங்களில் விளைகிறது வெண்ணெய்ப்பழம் ( Butter Fruit ) என்று அழைக்கப்படும் அவகோடா பழம் பெரிய சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கக்கூடியது. இந்த பழம் சற்று விலை அதிகமாகத்தான் இருக்கும் ஆனால் அதன் நற்குணங்கள் அதிகம் அதிக இனிப்புச்சுவையற்றது. கொழுப்பு நிறைந்த இந்த பழம் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும். மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது அவகோடா பழம். இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன. இதில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்ததாகும். மேலும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவகோடா பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்னைகளை சரிசெய்வதாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே எலும்புகள் வலிமையடைகின்றன. ஆர்த்தரைட்டீஸ் வந்து கஷ்டப்படுபவர்கள் இந்த பழங்களை தின்றால் அவர்களின் மூட்டுவலி மறைந்துவிடும். வயோதிகத்தால் ஏற்படும் மூட்டுவலி எலும்பு தேய்மானத்தால் தோன்றக்கூடியது. இந்தப்பழம் தின்றால் மூட்டுப்பகுதிகளில் எலும்பு தேய்மானம் ஏற்படாது. மேலும் சிறுநீரக பிரச்னையால் அவதிப்படாமல் இருக்கவும், தெளிவான கண்பார்வைக்கும் அவகோடா பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வருவது அவசியமாகும். புற்றுநோய்ப் போன்ற கொடிய நோய் தாக்கியவர்களுக்கு அவகோடா பழம் அதிகமாக கொடுத்தால் அது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கும். இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் உடலில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றது. செரிமான பிரச்சினைகளையும் சரிசெய்யக்கூடியது. கெட்ட கொழுப்பை குறைப்பதால் நமக்கு உடல்நலம் மற்றும் உடற்பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சினைகளை தீர்க்க இந்த பழத்தை நாம் சாப்பிடலாம். இது சிறுநீரை அதிகளவில் உற்பத்திசெய்து சிறுநீர்ப்பாதையில் உள்ள கற்களின் அடைப்பை நீக்குகின்றது. அவகாடோ அதிக கொழுப்பை உடலுக்கு தருவது உண்மைதான். ஒரு சாதாரண அவகாடோ பழத்திலிருந்து சுமார் 30 கிராம் கொழுப்பு சத்து கிடைக்கிறது ஆனால் இந்த பழத்தில் கிடக்கும் கொழுப்பு மோனோ சாச்சுரேட்டட் வகையை சார்ந்ந்தது .ஆனால் இந்த வகை கொழுப்புதான் நம் உடலில் சேரும் "கெட்டவகை "கொழுப்பை LDL (bad) cholesterol ஐ குறைகிறதாம்.அதோடு "நல்ல வகை கொழுப்பின் " HDL (good) cholesterol அளவை அதிகரிக்கிறதாம். இதோடு இல்லாமல் அவகாடோ உடலில் பொட்டாசியத்தின் அளவையும் அதிகரிப்பதால் இந்த பழம் இதயத்துக்கு மிக நல்லது.மேலும் ஒரு பழத்திலிருந்து சுமார் 300 கலோரி சக்தி கிடைப்பதால் இந்த பழம் சுலபமாக நம் தேவையினை பூர்த்தி செய்கிறது. இதில் நார்ச்சத்தும் உள்ளதால் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்ல காலை நேர உணவாக கூட இதனை கொள்ளலாம். நமக்கு அவகாடோ பழம் என்றால் அது மற்ற பழ வகைகளிப்போல இனிப்பும் மனமும் சுவையும் இருக்கும் என்று நினைக்காதீர்கள். கடைகளில் கரும் பச்சை நிறத்தில் தடித்த தோலுடன் காணப்படும் இந்த பழம் பழுத்தவுடன் சற்று மிருதுவாக மாறும் ஆனால் நிறமோ,மணமோ இருக்காது உள்ளே வெளிர் மஞ்சள் நிறத்தில் சதைபகுதி காணப்படும். அதனுள்ளே கடினமான உருண்டை வடிவில் ஒரு கொட்டை இருக்கும். அவ்வளவுதான். நாம் மாம்பழத்தை கிடை மட்டமாக கத்தியினால் சுற்றி வெட்டி பின்னர் சற்று சுழற்றி எடுத்தால் ஒரு குழிவான பகுதியும் ஒரு கொட்டை நடுவில் இருக்கும் பகுதியும் கிடைக்கும் அல்லவா? அதுபோலவே இந்த பழத்தையும் வெட்டி எடுத்து பயன் டுத்தலாம்.இதற்கென்று தனிப்பட்ட சுவை இல்லை எனவே நாம் விரும்பும் படி இதில் சுவைகளை சேர்த்துகொள்ளலாம். பெரும்பாலும் மற்ற நாடுகளில் இதனை அப்படியே சலாட் ஆக சாப்பிடுவதால் சமைக்க வேக வைக்க வேண்டுவதில்லை. பழத்தின் உள் பகுதியில் இருக்கும் சதை கதுப்புகளை ஒரு சிறிய டீ ஸ்பூன் உதவியால் முற்றிலும் வழித்து எடுத்து விட்டு . அதன் மீது சிறிது மிளகுதூள்,சிறிது சீரகத்தூள் தூவினால் ரெடி. உப்பு தேவைப்படுபவர்கள் உப்பை சேர்க்கலாம் சர்க்கரையுடன் சேர்த்தும் சாப்பிடலாம் அப்படியே சதைப்பகுதியை எடுத்து, சுகர், பால், ஐஸ்கியூப் போட்டு, மிக்சில அடிச்சு ஜூஸாக குடித்தால் சூப்பரா இருக்கும்

No comments:
Post a Comment