84 வயதில் 1 கோடி ரூபாயை ராணுவ வீரர்களுக்கு கொடுத்தவர் - சியோ தமிழ்

Breaking

Monday, May 8, 2017

84 வயதில் 1 கோடி ரூபாயை ராணுவ வீரர்களுக்கு கொடுத்தவர்



இதைப் படிப்பவர்கள் எல்லோரும் இடம், பொருள், ஏவல் எதுவும் பார்க்காமல் ஒரு நிமிடம் எழுந்து நின்று கைதட்டுங்கள்..

குஜராத், பாவ் நகரில் வசிக்கும் திரு. ஜனார்த்தன் பட், எஸ்பிஐ வங்கியில் ஒரு சாதாரண குமாஸ்தாவாக இருந்து, ரிட்டயர்ட் ஆகி, இன்று 84 வயதில் தான் சேர்த்து வைத்திருந்த ரூ. ஒரு கோடியை தன் மனைவியோடு சேர்ந்து நம் நாட்டு இராணுவ வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் நன்கொடையாக வழங்கியுள்ளார்..

இதில் ஒரு சோகம் என்னவென்றால், இந்தத் தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை.
ஆனால், அவரோ 'அதனாலென்ன, எனக்கு இந்தத் தாய் திருநாட்டின் எல்லையை,, இரவு பகல், மழை வெய்யில் பனி பாராமல் காக்கும் இத்தனை வீரர்களும் என் குழந்தைகளே, இவர்களுக்கு செய்யும் இந்த உதவி கூட சாதாரணமானதுதான், இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டும்' என்கிறார்..

கைதட்டச் சொன்னது, பாராட்டுக்காக அல்ல, நாமும் அவர் குழந்தைகளாக இருப்போம், அவர் வழி நடப்போம் என்பதற்காகத்தான்.

பூமியில் பிறந்தால், வந்து சென்ற ஒரு தடயம் வேண்டும்..

No comments:

Post a Comment

Pages