உடலில் உள்ள வியர்வை மற்றும் ஊளை சதைகளை குறைக்கும் நீச்சல் - சியோ தமிழ்

Breaking

Friday, April 13, 2018

உடலில் உள்ள வியர்வை மற்றும் ஊளை சதைகளை குறைக்கும் நீச்சல்


தினமும் 1 மணி நேரம் நீச்சல் அடித்தால் போதும் காலின் பெருவிரலில் இருந்து உச்சந்தலை வரை அனைத்து நரம்புகளும் வேலை செய்யும். அத்தனை தசைகளும் இழுத்துபிடிச்சு வேலை கொடுக்கும் அந்த அளவிற்கான அற்புதமான உடற்பயிற்சி.

கிராமத்து குளியலில் ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனையிருக்கும் அதில் முதலில் மோட்டார் குளியல்.. பம்பு செட் இருக்கும் இதில் மின்சாரம் குறிப்பிட்ட நேரத்திற்கு தான் ( 3 பீஸ் கரெண்ட் என்பார்கள் ) இருக்கும் அந்நேரங்களில் இந்த பம்பு செட் குளியல் தான் அனைவருக்கும்.
#சனிக்கிழமை முன்னேர் அறிவுரை படி எண்ணெய் தேய்த்து குளித்தல்
எவ்வளவு எண்ணெய் தேய்த்து இருந்தாலும் பம்பு செட் தண்ணீரின் வேகத்தில் கரையும் இந்த குளியல் சுகம் நகர வாசத்தில் இழந்ததில் இந்த சுகத்திற்கு அதிக இடம் உண்டு.

அமராவதி ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது மேல் முச்சு கீழ் மூச்சு வாங்கும் இதுவும் உடலில் உள்ள வியர்வை மற்றும் ஊளை சதைகளை குறைக்க மிக உதவும். கிணற்றில் புரடை கட்டி உள்ளே படுத்து இருப்பதும் தனித்துவமான சுகம். அப்படி பழகுபவர்கள் கொஞ்ச நாளில் இந்த சுவர் அந்த சுவர் என நீந்தி பழகிடுவார்கள். அதற்கடுத்து ஒவ்வொரு படியா ஏறி மேலே இருந்து குதிப்பதும் ஒரு சுகம். இது எல்லாம் கிராமத்தில் மட்டுமே அனுபவிக்கலாம் நகரங்களில் இன்று 2 பக்கெட் நீரில் குளித்தாகவேண்டிய காலத்தின் கட்டாயத்தில்!

Pages