உண்மைச் சம்பவம் அன்னதான கூடத்தின் உள்ளேயும் உலா வரும் அம்மா கொலுசு சத்தம் - சியோ தமிழ்

Breaking

Monday, April 9, 2018

உண்மைச் சம்பவம் அன்னதான கூடத்தின் உள்ளேயும் உலா வரும் அம்மா கொலுசு சத்தம்


பூட்டிய இருமுடி அன்னதானக் கூடத்தினுள்
"கலகலக்கும் வளையலோசை"...!!
"கொஞ்சும் கொலுசு சத்தம்"..!!
கூடத்தை வலம் வந்து செல்லும் அன்னபூரணி.. அன்னை ஆதிபராசக்தி....!!
மேல்மருவத்தூர் ஆலயத்தில், வருடத்தில் அறுபது நாட்கள் தைப்பூச இருமுடி விழா நடைபெறும்...!!
இருமுடி ஏந்திவரும் இலட்சக்கணக்கான பக்தர்களின் உணவுக்காக "மிகப் பெரிய அன்னதானக்கூடம்" செயல்பட்டு வருகிறது...!!
விழாக்காலங்களில் பக்கதர்களுக்கு அறுசுவை உணவு ஆதிபராசக்தி அறநிலயத்தால் வழங்கப்படுகிறது..!!
இந்த வருடம் இருமுடி விழா முடிந்து, அன்னதானக் கூடத்தை கழுவி சுத்தம் செய்து விட்டு,.
தொண்டர்கள் ஆலயம் திரும்பினர்...!!
யாரேனும் உள்ளே இருக்கிறார்களா என ஆய்வு செய்து விட்டு,.
அன்னதானக்கூட பொருப்பாளரும், செக்யூரிட்டியும் ஆராந்துவிட்டு,
கூடத்தின் கதவை பூட்டி சென்றனர்...!!
பொருப்பாளர் ஆலயம் சென்றுவிட,.
செக்யூரிட்டி முனுசாமி பூட்டிய கதவின் அருகே நின்று கொண்டிருந்தார்....!!
" அப்போது தான் பூட்டிய அன்னதானக் கூடத்தினுள்"....
"வளையல் ஓசையும்",
" கொலுசு சத்தமும்",
உள்ளே யாரோ இருப்பது போன்ற சத்தம் துல்லியமாக கேட்க தொடங்கியது...!!
செக்யூரிட்டி முனுசாமிக்கு சந்தேகம் வந்து விட்டது...!!
நாம் சரியாக பார்க்காமல் கதவை பூட்டிவிட்டோமோ..?
என எண்ணினார்...!!
யாரோ பாத்ரூம் பக்கம் போயிருந்து ,
அதை நாம் தான் கவனிக்காமல்,
தொண்டு செய்ய வந்த பெண்ணை உள்ளே வைத்து பூட்டிவிட்டோம்...
என நினைத்து,.....
அன்னதானக் கூடத்துக்குள் சென்று, தேடினார்...!!
வளையல் சத்தம் மேல்மாடி கூடத்தில் கேட்டது...!!
மேல்மாடிக்கு சென்று யாரம்மா உள்ளே என சத்தமிட்டார்.....
செக்யூரிட்டி முனுசாமி....!
ஆனால் எந்த குரலும் எதிர்திசையில் இருந்து வரவில்லை.....!!
மிக அருகில் , "வளையலும், கொலுசும் கலந்த சத்தத்துடன் " ,
"ஒரு பெண் நடந்து போகும் சத்தம் மட்டும் கேட்டது" ....!!
செக்யூரிட்டி முனுசாமி, யாரம்மா முன்னாடி போகிறது...??
கொஞ்சம் நில்லும்மா...?
என சத்தமிட்டு பின் தொடர,
கொலுசு சத்தம் மாடிப்படியில் கீழே இறங்கும் வழியில் கேட்க,...
செக்யூரிட்டி செல்போன் டார்ச் லைட்டை போட்டு ,
சத்தம் கீழே இறங்கும் திசையில் வெளிச்சமிட்டு பார்த்தார்...!!!
யாரோ ஒரு பெண் படியில் இறங்கி போகும்,
" சத்தம் மட்டும் கேட்டு கொண்டேயிருக்க.....!!
யாருமே கண்ணுக்கு தென்படவில்லை...!!
யாரு முன்னாடி போறான்னு தெரிஞ்சுக்காம விடக்கூடாதுன்னு செக்யூரிட்டி,,,,,
வேகமாக பின்தொடர்ந்து வந்தார்...!!
இப்பொழுது அந்த பெண் நடந்து செல்லும் சத்தம்,,,,,,
மிக அருகில் கேட்க....
சத்தம் வருகிறது...!!
யாருமே இல்லை....!!
இப்பொழுது தான் செக்யூரிட்டி முனுசாமிக்கு லேசான பதட்டம் ஏற்பட்டது....!!
விடாமல் செல்போனின் டார்ச் வெளிச்சத்துடன் பின் தொடர்ந்து நடந்து வந்தார்...!!
அந்த பெண்ணின் நடைசத்தம்....
கீழே இறங்கி வந்து ,
கீழ் தளத்தில் ,
"பெரிய அன்னபூரணி சிலை உள்ளது ..!!
அந்த அன்னபூரணி சிலை வரை வந்த நடைசத்தம்.....
சிலையினுள் சென்று முடிந்தது...!!
சிலை வரைக்கும் பின்தொடர்ந்த செக்யூரிட்டிக்கு,
இதை பார்த்ததும்,
"உடம்பெல்லாம் குப்பென்று பயத்தில் வேர்த்து கொட்ட தொடங்கிவிட்டது".......!!
அன்னபூரணியான அம்மா ஆதிபராசக்தியா...நம் முன்னே சென்றது..என நினைத்து...
பதட்டத்தில் கைகால்கள் வெலவெலக்க வெளியே ஓடிவந்துவிட்டார்...!!
அவர் என்னிடம் சொன்னது , சார்.. "அம்மா இருக்கு சார்" ...!!
அன்னதானக்கூடத்துக்கு உள்ளேயும் இருக்கு சார்...!!
"நானே பார்த்தேன் சார்" ...!!
இப்பொழுது எல்லாம் எனக்கு பயமே இல்லை சார்..!!
ஏன்னா அம்மா நம்ம பக்கத்திலையே இருக்குன்னு சந்தோசமாக டியூட்டி பார்க்கிறேன் சார்...!!
இப்பொழுதும் சில நேரங்களில் ,
அன்னதானக் கூடத்தின் உள்ளே ,
"அம்மா உலாவும் சத்தம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறதாம்" 

Pages