எது நிஜம் என்று பார்ப்போம் - சியோ தமிழ்

Breaking

Saturday, April 7, 2018

எது நிஜம் என்று பார்ப்போம்




ஏன் மீசை முளைக்கிறது
ஆணுக்கு தெரியாது.

ஏன் பெண்மை பூக்கிறது
பெண்ணுக்கு தெரியாது.

குழந்தை எப்போது பிறக்கும்
மருத்துவருக்கு தெரியாது.

ஏன் பற்கள் முளைக்கிறது
மழலைக்கு தெரியாது.

எங்கு யாருக்கு என்ன நடக்கும்
எவருக்கும் தெரியாது.

எப்போது எந்த நோய் வரும்
எவருக்கும் தெரியாது.

ஏன் மரணம் அழைக்கிறது
முதுமைக்கு தெரியாது.

மரணத்திற்கு பின் எங்கு
போவோம் ஒருத்தருக்கும் தெரியாது.

ஏன் மனிதன் அழுகின்றான்
கடவுளுக்கு தெரியாது.

கடவுள் எங்கு இருக்கிறான்
மனிதனுக்கு தெரியாது.

எல்லாமும் எல்லோருக்கும்
எப்போதும் தெரியாது.

என்றாலும் வாழ்கின்றோம்
ஏன் என்று தெரியாது.

நாளைக்கு என்ன ஆகும்
என்பது தெரியவே தெரியாது.

இன்று தான் நிஜம்.
இந்த நேரம்தான் நிஜம்.
இந்த நொடி நிஜம்.

நாளை பற்றி
கவலைப்படாமல்
நிம்மதியாக வாழ்வோம் .....💗

Pages