கீழா நெல்லியின் மருத்துவ குணங்கள் - சியோ தமிழ்

Breaking

Friday, June 29, 2018

கீழா நெல்லியின் மருத்துவ குணங்கள்

 


 மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் கீழாநெல்லி இலையை ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழுமையாக குணப்படுத்தலாம்.
 ழாநெல்லி வேர், சீரகம் ,நல்லெண்ணைய் இரண்டு தேக்கரண்டி ஆகியவை சேர்த்து பசும்பால் விட்டு அரைத்து,  நன்கு காச்சி வடிகட்டி குடித்தால் தலைவலி நீங்கும்.

கீழாநெல்லி இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து மோரில் கலக்கி 45 நாள்கள் சாப்பிட்டால் மாலைக்கண், பார்வை மங்கல் நோய்கள் தீரும்.

வீக்கம், கட்டி, கண்நோய், பித்தநோய் , சிறுநீர் பெருக்கி, வெப்பு அகற்றி ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும்  தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.


கீழாநெல்லி செடியுடன் 4 ஏலக்காய், அரிசி, கறிமஞ்சள் தூள், பால் சேர்த்து  காய்ச்சி காலை மாலை அருந்தினால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

பித்தம் காரணமாக ஏற்படுகிற முடி நரைத்தல் மற்றும் உதிர்தல் போன்ற பிரச்னைகளையும் கீழாநெல்லி குணப்படுத்துகிறது.

ஹெப்படைட்டிஸ்-பி மற்றும் சி நோய்களைக் குணப்படுத்துவதோடு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும், கல்லீரலில் சேர்கிற அளவுக்கு அதிகமான கொழுப்பைக் கரைக்கவும், மதுப்பழக்கத்தை நிறுத்துவதற்கும் இம்மூலிகை பெருமளவில் உபயோகிக்கப்படுகிறது.

ரத்தப்பரிசோதனை, ரத்தத்தை மாற்றுதல், பல பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உறவு கொள்ளுதல் போன்ற காரணங்களால் பரவுகிற ஹெப்படைட்டிஸ்-பி, ஹெப்படைட்டிஸ்-சி போன்ற நோய்த்தொற்றுக்களைக் குணப்படுத்தும் தன்மை கீழாநெல்லிக்கு இருக்கிறது.

No comments:

Post a Comment

Pages