வாசனை இலை ரம்பை
தமிழில் ரம்பை இலை என அழைக்கப்படும் இது
pandan leaves அல்லது pandanus amarylifolius என
ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது .
இது ஒரு வெப்ப மண்டல தாவரம் .
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சமையலுக்கு
சுவையூட்டும் பொருளாக பயன்படுகிறது.
பிரியாணி, இறைச்சி, குழம்பு வகைகளில்
வாசனைக்காக பயன்படுத்தப்படுகிறது.
இது காடுகளில் அரிதாக காணப்படுகிறது.
பரவலாக பயிரிடப்படுகிறது.
இதன் இலை நீண்ட கத்தி வடிவில்
பக்கவாட்டுகளில் சிறிய முள் போன்ற
தோற்றமுடையது. பூக்கள் மிக
அரிதாகவே வருகிறது .
வேரிலிருந்து புது கிளைகள்
தோன்றி வளருகிறது.
இலைகளின் வாசனை வெளியே
வருவதற்க்கு இலையை நன்றாக வெட்டி
பிரியாணி, இறைச்சி, குழம்பு வகைகளில்
வேக வைத்தால் அதன் நறுமணமும்
சுவையும் வெளியே வரும்.
No comments:
Post a Comment