பயன் தரும் நல்ல மூலிகை சோற்று கற்றாழை Aloe Vera Herbal - சியோ தமிழ்

Breaking

Thursday, January 14, 2016

பயன் தரும் நல்ல மூலிகை சோற்று கற்றாழை Aloe Vera Herbal





சோற்று கற்றாழை
சோற்று கற்றாழை ஒரு பூக்கும் தாவரம். வறட்சியான பகுதிகளில் வளரும் ஒரு மருந்து செடியாகும். தமிழில் கற்றாழை, கன்னி, தாழை, போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

கற்றாழை சதைப்பற்றுடன் கூடிய  தடிப்பான அடுக்குமடல் கொண்ட செடி வகை . கற்றாழை
மடல்கள் இருபுறமும் முள்போல் சொரசொரப்பான ஓரங்களை கொண்டிருக்கும். நுனியில் கூர்மையான முட்களுடன் காணப்படும்.இதன் மடல் அல்லது இலை, வேர் ஆகியவை மருத்துவ பயனுடையது. பக்க கன்றுகள் முறையில் உற்பத்தியை பெருக்கும். இது இலையில் உணவை சேமித்து வைக்கும் செடி வகை. நீர் இல்லாத இடத்திலும் வளரக்கூடியது.
கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது .
கற்றாழையின் சதைப்பிடிப்பை சேகரித்து அதனுடன் தேங்காய் எண்ணை சேர்த்து நீர் சுண்ட காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். குளிர்ச்சியுடன் நல்ல தூக்கம் வரும்
கண்ணில் அடிபட்டோ அல்லது வேறு ஏதாவது காரணங்களாலோ கண் சிவந்து வீங்கி இருந்தால்கற்றாழை சோற்றை கண்ணில் கட்டி வைத்து இரவில் தூங்கினால் வேதனை குறையும் . சில நாள்கள் இவ்வாறு செய்து வர கண்வலி குறையும்
கற்றாழை சோற்றை எடுத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் உலர்ந்த சருமம் மாறி முகம் அழகாகும்

முகத்தில் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் காயத்திற்கு கற்றாழை சாறை பயன்படுத்தினால் காயம் விரைவில் குணமாகி முகம் அழகு பெறும்

பெண்கள் முகம் பொலிவு பெற இரவில் கற்றாழை சாறை முகத்தில் பூசி விட்டு காலையில் எழுந்தவுடன் சிறிது சூடான நீரால் கழுவி வர வேண்டும்

சோற்று  கற்றாழை வேர்களை வெட்டி சிறு துண்டுகளாக்கி அதை சுத்தம் செய்து இட்லி பானையில் பால் விட்டு ஆவியில் நன்கு வேகவைத்து பின்னர் அதை எடுத்து நன்கு காய வைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய உறவு மேம்படும் .

சோற்று  கற்றாழை ஜூஸ் செய்ய
சோற்று  கற்றாழை இலை ஜெல்   2 மேஜை கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு            1 மேஜை கரண்டி
தேன்                               2 மேஜை கரண்டி
உப்பு  1 சிட்டிகை
சோற்று  கற்றாழை ஜெல்லை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். சோற்று  கற்றாழை ஜூசுடன் எலுமிச்சம் பழச்சாறு தேன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். நாகு கலந்த பின் பருகவும் . இதை வாரம் ஒரு முறை பருகி வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.


No comments:

Post a Comment

Pages