வேறு பெயர் தொட்டால் சிணுங்கி ,
நமஸ்காரி, காமவர்த்தினி,தொட்டாடி
இதன் இலை மற்றும் வேர் மருந்தாக
பயன்படுகிறது
இதன் தாவர பெயர் : Mimosa pudica
தாவரக்குடும்பம் :Fabaceae
தொட்டால் சுருங்கி எல்லா இடங்களிலும்
ஈரப்பதமான இடங்களில் தானே வளரும்
இயல்புடையது . இதன் இலையை
களிமண்ணுடன் அரைத்து வாதம் உள்ள
இடங்களில் பற்று போட்டால் வாத வீக்கம்
குறையும் இதன் வேரையும் இலையையும்
சம அளவில் எடுத்து நன்றாக காய வைத்து
பொடியாக்கி 10 கிராம் பாலில் குடிக்க சிறுநீர்
நோய்கள் , மூலச்சூடு தீரும் இதன் இலையை
பறித்து சாறு எடுத்து படை ,
தேமல் மீது தடவி வந்தால் நோய் விரைவில் குணமாகும்
No comments:
Post a Comment