வைகை அல்லது வைகையாறு அல்லது
வைகை நதி என்பது தென்
இந்தியாவின் தமிழகத்தில் பாயும் ஆறுகளுள் ஒன்று.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பெரியார் பீடபூமியில்
தோன்றி வடகிழக்காகப் பாய்ந்து, வடக்கே பழனி குன்றுகளாலும்
தெற்கே வருசநாடு குன்றுகளாலும் அரண் செய்யப்பட்டுள்ள கம்பம்
பள்ளத்தாக்கை அடைகிறது.பின்னர் வருசநாடு
குன்றுகளின்
கிழக்கு மூலையை அடைந்ததும், தென்
கிழக்காகத் திரும்பி மதுரை மாநகர் வழி
பாய்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் பாக்கு
நீரிணையில் கலக்கிறது.வைகை ஆற்றின் நீளம்
258கி.மீ. பாசனப் பரப்பு
7031ச.கி.மீ. பொதுவாக
மழைக்காலத்தில், குறிப்பாக வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மட்டும் இவ்வாற்றில் நீர்ப்பெருக்கு
ஏற்படும்.பிற காலங்களில் பொதுவாக
வறண்டே (இதன் வறட்சிக்கு காரணமாக
வெள்ளி மலையில் ஏற்படுத்தப்பட்ட அணையும்,
அதிலிருந்து நீர் மேற்காக கேரள
எல்லையை நோக்கி நீர் திருப்பப்பட்டு[சான்று தேவை] பெரியாறு
நீர் தேக்கத்தில் - தேக்கடி - தேக்கப் படுவதால் மழைக்காலங்கள்
தவிர பிற காலங்களில் தண்ணீர்
வரத்து வாரதபடி செயற்கையாக வறட்சி
ஏற்படுத்தப் பட்டு உள்ளது எனலாம்.)காணப்படும்.
வைகை ஆற்றுப்படுகை
வைகையாற்றைக்
காட்டும் வரைபடம்
இவ்வாற்றுப்
படுகை 9º 15’ மற்றும் 10º 20’ வடக்கு அட்ச ரேகைக்கு
இடையிலும், 77º 10’ மற்றும் 79º 05’ கிழக்கு தீர்க்க ரேகைக்கு
இடையிலும் அமைந்துள்ளது. மேலும் மதுரை, தேனி,
திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் என மொத்தம் 7031 சதுரகிலோமீட்டர்
பரப்பளவு கொண்டுள்ளது. பெரியாறு அணை, வைகை அணை,
சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை,
மருதநதி அணை, சாத்தையாறு அணை
ஆகியவை இந்தப்படுகையில் உள்ள அணைகளாகும்
துணை ஆறுகள்
சுருளியாறு,
தேனியாறு, வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு, மருதநதி, சிறுமலையாறு, சாத்தையாறு முதலியவை வைகையின் துணை ஆறுகளாகும்.
பழனி மலையில் உற்பத்தியாகும் வராகநதி
கொடைக்கானல் மலையிலிருந்து வரும் பாம்பாற்றுடன்(வெள்ளி
அருவி உள்ள ஆறு) இணைந்து
தேனி க்குக் கிழக்கே குன்னூருக்குத்
தெற்கில் வைகையுடன் கலக்கிறது.
பின்னர்
முல்லையாராக பயணித்து, இவ்வாறு பயணிக்கும் பொழுது
சுருளியாறு இதனுடன் கலக்கிறது, பின்னர்
வள்ளல் நதி என்று சொல்லப்படும்
வருசநாட்டு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியுடன் கலந்து
வைகையாராக வைகை அணையைச் சென்று
அடைகிறது.
மேலும்
கொடைக்கானல் மலையிலிருந்து உருவாகும் ஆறுகளும் பெரியகுளம் வழியாக சென்று வைகை
அணை முன்பு இந்த ஆற்றில்
கலக்கிறது. அவ்வாறு கலக்கும் ஆறுகளில்
மஞ்சளாறு, வராக நதி குறிப்பிடத்தக்கது
ஆகும்.
1895ல்
ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, கேரள,
தமிழக எல்லையில் உற்பத்தியாகும் பெரியாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் (இந்த நீர் தேக்கம்
ஆங்கில பொறியாளரான பென்னி குக் என்பவரால்
தனது சொந்த பணத்தால் கட்டப்பட்டதாகும்
என்பது குறிப்பிடத்தக்கது) கட்டப்பட்டு ஒரு பகுதி நீர்
மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு
குடைவின் மூலம் வைகையில் திருப்பிவிடப்படுகிறது.
No comments:
Post a Comment