அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்
சுவாமி : சுப்பிரமணிய சுவாமி
அம்பாள் : தெய்வானைதீர்த்தம் : சன்னியாசி தீர்த்தம்,லட்சுமி தீர்த்தம்,சரவண பொய்கை,சத்ய கூபம் உட்பட 11 தீர்த்தங்கள்
தலவிருட்சம் : கல்லத்தி
தலச்சிறப்பு :
முருகனின் அறுபடைவீடுகளில் இதுவே முதல் வீடு.இங்குதான் முருகன் தெய்வானையை
திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
இக்கோவிலில் முருகன்
மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அறுபடைவீடுகளில் இங்கு மட்டுமே முருகன் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.இங்கு முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடைபெறுவது இன்னொரு சிறப்பு.
மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அறுபடைவீடுகளில் இங்கு மட்டுமே முருகன் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.இங்கு முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடைபெறுவது இன்னொரு சிறப்பு.
தல வரலாறு :
முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளை
அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம்
செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும்,
சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.இதனால் மகிழ்ச்சியடைந்த
தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய
நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வானையை திருமணம்
செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் -தெய்வானை திருமணம் இந்த
திருப்பரங்குன்றத்தில் நடந்தது.திருமண
விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன
தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க,
இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான்,
தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம்
கூறுகிறது.
பாடியோர் : நக்கீரர், அருணாகிரி நாதர், சுந்தரர், மாணிக்கவாசகர்
நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் 1 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் : வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, புரட்டாசி வேல் திருவிழா, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்.
அருகிலுள்ள நகரம் : மதுரை
கோயில் முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் - 625 005, மதுரை மாவட்டம்.
No comments:
Post a Comment