ஒரு தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால், எதற்காகவும் தாயை இழக்கக்கூடாது.. - சியோ தமிழ்

Breaking

Monday, February 19, 2018

ஒரு தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால், எதற்காகவும் தாயை இழக்கக்கூடாது..


: விக்கல் எடுத்ததும் மகன்தான் நினைக்கிறான் என எண்ணி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்..
‬: ஒரு தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால், எதற்காகவும் தாயை இழக்கக்கூடாது..
‬: படிப்ப விட அப்பா அம்மா ஒசத்திதான். அதனாலதான் இன்சியல முதல்லயும், படிப்ப கடைசியிலும் எழுதுறோம்..!!
‬: 'ஹலோ' சொன்னதும் "என்னடா உடம்பு சரியில்லையா" என்று கேட்கும் அம்மாவிடம் தோற்றுப் போகின்றனர் உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களும்..!!
‬: தாய் தந்தையாரின் அருமை நீ வளரும் போது தெரியாது.. உன் பிள்ளையை நீ வளர்க்கும் போது தான் தெரியும்...
‬: அம்மாவை சந்தோசப்படுத்த பணம், நகை வேணுமான்னு கேக்க தேவையில்லை.. சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சோறு போடும்மா என்று கேட்டாலே போதும்..
: வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.. கண்கள் இல்லாமல் ரசித்தேன்.. காற்றே இல்லாமல் சுவாசித்தேன்.. கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.. என் தாயின் கருவறையில் மட்டும்..!!
‬: புரண்டு படுத்தால் நாம் இறந்துவிடுவோமோ என்று கருவில் இருந்த நமக்காக தூக்கத்தை கூட துளைத்து விட்டு இரவில் விழித்திருந்த சூரியன்.. "அம்மா"

Pages