1. மஞ்சளை உணவில் சேர்ப்பதால் அது பசியை உண்டாக்கும். மஞ்சளை உணவில் சேர்ப்பது வெறும் நிறத்திற்காக மட்டுமல்ல மணத்திற்காகவும் உணவிலுள்ள தேவையற்ற கிருமிகளையும் நீக்கும் என்பதால் தான்.
2. கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சங்கு சம அளவு அரைத்து பூச முகப்பருக்கள் மறையும்.
3. பெண்கள் முக்கியமாக முகத்தில் மஞ்சளை பூசுவதற்குக் காரணம் முகத்தில் முடி வளருவதை தடுக்கிறது.
4. மஞ்சளும், கடுக்காயும் பூச சேற்றுபுண் போகும்.
5. பெண்கள் மஞ்சளை பூசிக் குளிப்பதினால் அவர்கள் மேனி பொன்நிறம் பெறும்.
6. மஞ்சள் சுட்ட சாம்பலுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பூச, ஆறாத புண்கள் ஆறும்.
7. மஞ்சள் சுட்ட சாம்பலுடன், ஊமத்தன் இலைச்சாறு குழைத்து பூச கட்டிகள் பழுத்து உடையும்.
8. அடிப்பட்டதினால் ஏற்பட்ட இரத்தக் கட்டு உள்காயங்களை நீக்க மஞ்சளை பற்று போடுவார்கள்.
9. கஸ்தூரி மஞ்சளுடன், வெண்கடுகு சாம்பிராணி சேர்த்தரைத்து சுளுக்குகளுக்கு பற்று போட்டால் குணமாகும்.
10. மஞ்சள், வேப்பிலை உடன் சிறிது வசம்பும் சேர்த்து அரைத்து பூச, மேகப்படை, விஷக்கடிகள் வட்டமான படைகள் போகும்.
11. மஞ்சளுடன், சாம்பிராணி, ஏலம் சுக்கு சேர்த்தரைத்து தலையில் பற்றிட தலைவலி போகும்.
12. மஞ்சளுடன் சுண்ணாம்பு மூலிகையும் சேர்த்து மிகவும் பிரபலமான புத்தூர் (ஆந்திரா) எலும்பு முறிவுக்கு கட்டப்படுகிறது.
13. மஞ்சள் தூளுடன், சிறிது கற்பூரத்தூளை சேர்த்து, கை கால்கள் சில்லிட்தற்கு பூச சூடேறும்.
14. மஞ்சளை இலுப்பை எண்ணெயில் குழைத்து, தடவ கால் வெடிப்பு குணமாகும்.
15. மஞ்சளை சுட்டு முகர மூக்கில் நீர் வடியும் ஜலதோஷம் நிற்கும்.
16. வெறும் மஞ்சள் பொடியை புண்கள் மீது தூவ புண்கள் ஆறும்.
17. மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூச அம்மையினால் ஏற்பட்ட கொப்புளங்கள் ஆறும்.
இப்படியாக இவ்வளவு பயன் தரும் மஞ்சளை நாமும் பயன்படுத்தி. மேற்கண்ட பல பிரச்சனைகளில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வோம்.