கோடை வெயிலின் வியர்வை நாற்றத்தை போக்கி நம் உடலுக்கு நறுமணம் தரும் வெட்டி வேர் குளியல் - சியோ தமிழ்

Breaking

Saturday, February 17, 2018

கோடை வெயிலின் வியர்வை நாற்றத்தை போக்கி நம் உடலுக்கு நறுமணம் தரும் வெட்டி வேர் குளியல்

வெட்டிவேர் இயற்கை மூலிகை குளியல் 

கோடைக் காலம் ஆரம்பமாவதற்கு முன்பே அனல் அடிக்கும் வெயிலும், வியர்வை வழியும் கொடுமையும் தொடங்கிவிடும். பருவ நிலை மாறும்போதே, ஒருசில நோய்களும் தலைகாட்டத் தொடங்கிவிடும். வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை விரட்டி அடிப்பதில், வெட்டிவேர் மூலிகைக்கு நிகர் வேறு இல்லை. வெட்டிவேர் மகத்தான மருத்துவ பயன்கள் கொண்டதாகும்.
பொருட்கள்:
வெட்டிவேர்,சந்தனம், அகில், அதிமதுரம், கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், மகிழம் பூ, ஆவரம் பூ, பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, கார்போகரசி, பச்சை பயறு.
காலநிலை மாறுபாடு மற்றும் ஹார்மோன் மாற்றத்தால் இளமையில் முகப் பருக்கள் வருவது சகஜம். அதிக உஷ்ணத்தால், சிலருக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும். முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர்.வந்த முகப் பருக்களை போக்குவதிலும், பரு வராமலே தடுப்பதிலும் வெட்டிவேர் சிறப்பாக செயல் படும்.
முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர்.
சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும். இந்த இரு பிரச்சனைகளுக்கான தீர்வு வெட்டி வேர் குளியல் மாவில் இருக்கிறது.
தினமும் வெட்டி வேர் குளியல் மாவில் குளித்து வந்தால் சிறு கட்டிகளும் வரிகளும் மறைந்து சருமமும் மிருதுவாகும்.
வெயிலினால் வரும் சரும நோய்கள், வியர்குறு மற்றும் அரிப்பிற்கு வெட்டி வேர் குளியல் மாவு சிறந்த பலனை அளிக்கும். வெட்டிவேர் குளியல் மாவு முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி முகத்தை பொளிவு பெற செய்யும்.
வெயில் காலங்களில் வியர்வையினால் உண்டாகும் வியர்வை நாற்றத்தைப் போக்கி நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியது. மேலும் வெயிலினால் உன்டாகும் உடல் வெப்பத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறுது.
இந்த வெட்டிவேர் இயற்கை குளியல் மாவானது ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்றது.

Pages