எட்டி விதையை சாப்பிடடால் நம்மை கொசுவும் கடிக்காது எந்த வித விஷ ஜந்துக்களும் கடிக்காது - சியோ தமிழ்

Breaking

Monday, February 19, 2018

எட்டி விதையை சாப்பிடடால் நம்மை கொசுவும் கடிக்காது எந்த வித விஷ ஜந்துக்களும் கடிக்காது

எட்டி மரத்தின் கொட்டைகள் பல ஆயிரம் டன்கள் மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது ஆனால் உள்நாட்டில் இதன் பயன்பாடு வெகுவாக குறைக்கபட்டு மறக்கடிக்கபடுகிறது.

கொசுக்கள் என்னை கடிப்பதில்லையே ஏன்? என்ற பலவருட கேள்விகளுக்கு விடை கிடைத்தது, இருளர் இன மக்களின் மருத்துவம் அதாவது எப்பேர்பட்ட பாம்பு ,தேள் போன்றவை கடித்தாலும் எட்டியை மருந்தாக கொடுத்தால் பிழைத்து கொள்ளலாம். பாம்பு பிடிப்பதை தொழிலாக செய்யும் பழங்குடியினர் வருடத்திற்கு ஒரு மண்டலம் எட்டிவிதை கற்பத்தை எடுத்து கொள்வதை கவனத்தில் கொள்வோம். தேன் பூச்சிகளும் கடிப்பதில்லை இவர்களை. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கட்டுவிரியன் பாம்பு கடித்து மிகவும் அபாயமான கட்டத்தில் இருந்து என்னை எட்டி விதை,மற்றும் மரத்தின் பட்டையை கசாயமாக கொடுத்து காப்பாற்றினார்கள். அன்றிலிருந்து இன்று வரை கொசுக்கள் என்மீது வந்து அமரும் ஆனால் கடிக்காமல் பறந்து போய்விடும்.
ஆங்கில மருத்து மாத்திரைகலால் உடலில் ஏற்பட்டு இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற Nux Vomica(நக்ஸ்வாமிகா) எனப்படும் நஞ்சு முறிவு மருந்தை ஹோமியோபதி மருத்துவர்கள் பயன்படுத்தி உடலின் நச்சு தன்மை வெளியேற்றிய பின்பே வைத்தியம் பார்கிறார்கள் என கருதுகிறேன். இந்த மருந்து எட்டி விதைகளில் இருந்து தயாரிக்கபடுகிறது.
மேலை நாடுகளில் இந்த Nux Vomica Tinctureஐ பயன்படுத்தி இருதய வியாதிகளை குணபடுத்தியதாக செய்திகளில் படித்தது உண்டு.
மேலும் முகவாதம் எனப்படும் நோயை போக்க சீன மருத்துவத்தில் எட்டியில் இருந்து எடுக்கப்படும் மருந்து பயன்படுத்தபடுகிறது. இதில் சிட்ரக்னைன்,புருனைன்,வாடிசைன் எனப்படும் மூன்று முக்கிய அல்காய்டுகள் உள்ளன.
நடைமுறையில் எட்டி மரத்தின் பயன்கள்.
1. பெண்களுக்கு பேய் பிடித்தல் எனப்படும் இஸ்டீரியா மயக்கநோய் ஏற்பட காரணமாக இருப்பது கருப்பையின் சுற்று புறங்களில் உள்ள இரத்த நரம்புகள் பாதிக்கப்படுவதால் இந்த குறைபாடு உண்டாகிறது. அதனை போக்க எட்டி மரத்து வேரை எடுத்து நீர் சேர்த்து இரண்டில் ஒரு பாகமாக காய்ச்சி கொடுக்க நோய் குணமாகிறது இதே கசாயத்தை பயன்படுத்தி இருதய கோளாறுகளையும் சரி செய்யலாம்.
2.எட்டி கற்பத்தை பயன்படுத்தி நரம்பு மண்டலத்தை பலப்படுத்தலாம் அதன் மூலம் மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும் அதிகமாக கோபபடுதல், சாரயம் போன்ற போதை மீதான இச்சைகள் தீரும்.
எட்டி கற்பம் செய்முறையில் பல முறைகள் இருக்கிறது இது ஒரு எளியமுறை. தேவையான அளவு எட்டி விதைகளை நெல் உமியின் மீது பரப்பி உமியை எரிக்க எட்டிவிதை எரிந்து திருநீறு போலாகிவிடும் அதை எடுத்து சிறிதளவு தேனுடன் கலந்து சாப்பிட்டபின் வெள்ளாட்டுபால்//மாட்டுபால் குடித்து வர உடலானது வன்மையாக மாறும் பெண்போகம் அதிகரிக்கும்,அதை கட்டுபடுத்தி உடலை வளமாக்க ஆயுளை நீட்டிக்கும் என ஏடுகளில் குறிப்புகள் உண்டு. ஆயுளை அதிகரிப்பதில் எட்டி கற்பத்திற்கு பெரும் பங்கு உண்டு. காபி டீக்கு மாற்றாகவும் இதனை பயன்படுத்தலாம் பனங்கற்கண்டு சேர்த்து. சிறப்பான பலன் உண்டு.
3.ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மல்கான்கிரி பகுதியில் இருக்கும் பழங்குடியினர் எட்டிமரங்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் இருக்கும் வௌவால்களை கொன்று அதன் மாமிசத்தை பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோயை குணபடுத்துகின்றனர் இதை நான் கண்டுணர்ந்த விடயம். வௌவ்வால்கள் எட்டி பழங்களை அதிகமாக விரும்பி உண்ணும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
4.சுத்தி செய்த எட்டிவிதைகளை தாது விருத்தி லேகியங்களில் சேர்ப்பார்கள் இது நரம்பு மண்டலம் சார்ந்த அனைத்தையும் துரிதமாக்கும்.
5.எட்டிமரத்தின் தண்டுபகுதியை(பட்டையை உரித்த பின்பு)எடுத்து காயவைத்து பொடித்து சலித்து வெந்நீரில் பயன்படுத்த வாதநோய்கள் தீரும். அதே வேலையில் எட்டி இலைகளை போட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து பயன்படுத்தி வர வாதம் சம்மந்தமான கோளாறுகளும் தீரும்.
6.மலைவாழ் மக்கள் உடலில் ஏற்படும் கட்டிகளை கரைக்க எட்டிமரத்தின் துளிரை அரைத்து வெண்ணெய் சேர்த்து தடவு கட்டிகள் கரைந்து அமுங்கி விடுகிறது. இப்போதும் வழக்கில் உள்ளது.
7.கடுமையான ஒற்றை தலைவலி தீர; கைபிடியளவு எட்டி கொழுந்து,20 மிளகு , 10 பள்ளு பூண்டு சேர்த்து நல்லெண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர ஒற்றை தலைவலி தீரும்.
8. மிகச்சிறந்த வலி நிவாரணியாகவும்//மயக்க மருந்தாகவும் இதனை பயன்படுத்தலாம் நரம்புமண்டலத்தை பாதிக்காமல். எட்டிவிதையுடன் சிறிதளவுகஞ்சா சேர்த்து மயக்கமருந்து செய்யலாம். தமிழ் மருத்துவ முறைளில் இது உண்டு.
9.நரம்பு மண்டலம் மற்றும் உடலின் நச்சுகளை வெளியேற்றும் சிறந்த துணை மருந்து எட்டி மரத்தின் பொருட்கள்.
10.கல்லீரல் நோயான வரட்டுகாமாலைக்கு எட்டி இலை ஏலெட்டு கால் லிட்டர் தண்ணீரில் நான்கில் இரு பாகமாக காய்ச்சி கொடுக்க வரட்டு காமாலை குணமாகும்.
"எட்டி காய்த்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன" இந்த பழமொழியை ஏன் எதற்காக பயன்படுத்தினர் இதன் கால கட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் ஏனெனில்......
காளங்கிநாதர்,தேரையர்,புலிப்பாணி, அகத்தியர் போன்ற சித்தர்கள் எட்டியின் மகிமையை சிலாகித்தே உள்ளனர். ஔவையார் அவர்களும் இதனை காஞ்சிரங்காய் என்று குறிபிடுகிறார்
இப்பேர்பட்ட மதிப்பு மிக்க மூலிகை மரத்தை நாம் சரியாக பயன்படுத்த தவறியதற்கு பின்னால் உள்ள அரசியல் என்ன ஏன் என்பது விளங்கவில்லை....
இதனை சரியான முறையில் சுத்தி செய்து மட்டுமே பயன்படுத்த வேண்டியது அவசியம். சரியான முறையில் பயன்படுத்தாத போது உடலில் வாந்தியோ மயக்கமோ ஏற்பட்டால் நாவல் மரத்தின் பட்டையை கசாயமாக கொடுக்க குறைபாடு நீங்கும் .மேலும் எலுமிச்சை சாறு, சீரகதண்ணீர்,அகத்தி கீரை,புளித்தமோர் இதற்கு முறிவு மருந்து.

Pages