உடல் வலி வீக்கம் இவற்றை குறைக்க மருந்து இல்லாமல் இயற்க்கை வழி செய்து பாருங்கள் - சியோ தமிழ்

Breaking

Thursday, March 15, 2018

உடல் வலி வீக்கம் இவற்றை குறைக்க மருந்து இல்லாமல் இயற்க்கை வழி செய்து பாருங்கள்


இன்றைய சூழலில் ஐந்தில் இருவர் தீவிரமான உடல் வலியால் அவதிப்படுகின்றனர். இப்படி உடல் வலி அல்லது மூட்டு வலி அல்லது தசை பிடிப்பு ஏற்படும்போது பலவீனமடைந்து, அன்றாட வேலையைக்கூட சரிவர செய்யமுடியாமல் போகும். போதிய உடற்பயிற்சி செய்யாததாலும்
, தவறான வாழ்க்கை முறையை பின்பற்றுவதாலும்தான் இவ்வகை வலிகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, சீரான முறையில் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும்
. இவ்வகை வலிகளை குறைக்க சந்தையில் பல மருந்து விற்கப்படுகிறது. ஆனால் அதனை உட்கொள்வதால் பக்கவிளைவு ஏற்படலாம். ஆரோக்கியமான உணவு உண்ணுவதால் தீவிரமான உடல் வலி மட்டும் குறையாமல், ஏற்கனவே நீங்கள் அனுபவிக்கும் மற்ற வலிகளும் குறையும். உடல் வலியை குறைக்க பல உணவுகள் இருக்கிறது. அந்த உணவுகளில் கொஞ்சம் எடுத்துக்கொண்டால் போதும், உடல் வலி மட்டுமின்றி, மன பாரமும் குறையும். அதன் விவரம் இதோ...
காரமான மிளகு: இவை கண்களில் நீரை வரவைப்பதோடு நிற்காமல், உடல் வலியையும் குறைக்கும். கீல்வாத வலியை குறைக்க காரமான மிளகு பெரிதும் உதவும். தினமும் சிறிதளவு மிளகு உட்கொண்டால் நல்ல பயன் தரும்.
கிரீன் டீ: பொதுவாக உடல் எடையை குறைக்க கிரீன் டீ பெரிதும் உதவும். இதில், ஆண்டி-ஆக்சிடன்ட் குணங்கள் இருப்பதால் வீக்கங்களை குறைக்கவும் உதவும். தினமும் ஒரு கப் கிரீன் டீ பருகினால் பல நன்மைகளை அளிக்கும்.
ஆலிவ் எண்ணெய்: மெடிட்டரேனியன் பகுதிகளில் இருந்து கிடைக்கும் இந்த எண்ணெய், வலி மற்றும் வீக்கங்களை குறைக்க உதவும். அதிலும் சமையலுக்கு ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தினால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

கடல் உணவுகள்: கடல் உணவுகளில், முக்கியமாக மீன்களில் ஒமேகா-3 அதிகமாக உள்ளது. இது, உடல் வலி மற்றும் அழற்சியையும் நீக்கும். உணவில் மீன் சேர்த்துக் கொண்டால் தீவிரமான உடல்வலி குறையும்

Pages