தினமும் தலைவாரும் போதுமுடி ரொம்ப கொட்டுதா? இந்த ஆயுர்வேத டிப்ஸ்களைசெய்து பாருங்கள் - சியோ தமிழ்

Breaking

Friday, March 9, 2018

தினமும் தலைவாரும் போதுமுடி ரொம்ப கொட்டுதா? இந்த ஆயுர்வேத டிப்ஸ்களைசெய்து பாருங்கள்


தினமும் தலைவாறும் போது சீப்பில் கொத்துக் கொத்தாக முடி உதிர்கிறதா? உதிர்ந்த முடிகளை பார்க்கும் போது எல்லாம் கவலையாக இருக்கிறதா? இந்த முடி உதிர்வு என்பது சாதாரணமான ஒன்று தான் என்றாலும் கூட, எதிர்பாராத அளவுக்கு உண்டாகும் முடி உதிர்வு பிரச்சனையானது சாதாரணமானது அல்ல. உங்களுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகமான அளவு முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் ஏதேனும் உடல்நலக் கோளாறு உள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
தலைமுடி பிரச்சனைகள் கண்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துதல் மற்றும் கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவதை காட்டிலும் உங்களது வீட்டிலேயே இருக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது. இந்த பகுதியில் உங்களது தலைமுடி பிரச்சனைகளுக்கு சில தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.
சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்
கூந்தல் மிக அதிகமாக உதிரும்போது, வெந்தயக்கீரையை அரைத்துத் தலையில் தடவிக் கொண்டு கொஞ்ச நேரம் கழித்துக் கூந்தலைத் தண்ணீரால் அலசினால் முடி உதிருவது நிற்கும்.
ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் ஒரு முட்டையை நன்கு கலக்கி அதை தலையில் தேய்த்துக்கொண்டு அரை மணிநேரம் ஊறவிடவும். பிறகு குளிர்ந்த இருந்த நீரில் தலையை நன்றாக அலசி ஷாம்பூ போட்டுக் குளிக்கவும். இதனால் தலைமுடிக்கு நல்ல ஊட்டம் கிடைப்பதுடன் கூந்தல் மிருதுவாகவும் ஆகும்.
தேநீர் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சம் பழச்சாற் றைப் பிழிந்துவிட்டு தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி பளபளப்படையும். 10-15 செம்பருத்தி இலைகளைப் பறித்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்து ஓரே ஒரு மேசைக் கரண்டி சீயக்காய்த்தூளைக் கலந்து நீராடினால் தலைமுடி பளபளக்கும்.
இளநரை வராமல் தடுக்க மருதாணித் தைலம், அரைகீரைத் தைலம், பொன்னங்கண்ணி தைலம், கரிசாலங்கண்ணி தைலம், செய்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தரும்


Pages