தூக்கமின்மையை போக்கி நிம்மதியாக
தூங்கும் வழிமுறைகள் பற்றி நாம்
இந்த வீடியோவில் பார்க்கலாம்
தூக்கமின்மை
என்பது உடலுக்குத் தேவையான அளவு தூங்கமுடியாமல் இருக்கும் ஒரு நோய்அறிகுறி. நல்ல
தூக்கமும் மகிழ்ச்சியும் இருந்தால் மனிதன் மிகவும் இளமையாக இருப்பான். இரவுத்
தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் வேறெந்த பெரிய நோயும் இல்லை என்று தெரிந்து
கொள்ளலாம்.
பிறந்த
குழந்தைக்கு 16 மணியிலிருந்து 20 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது.வயது
வந்தவர்களுக்கு 7 மணி முதல் 9 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது.
வயதானவர்களுக்கு 5 மணி முதல் 6 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது
சிறு வயதினருக்கு
வரும் சிறிய தொந்தரவுகளினால் தூக்கம் தடைபடும்
அது விரைவில் சரியாகி விடும் ஆனால் 30 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே வரும் தூக்கமின்மை
பிரச்னைதான் உடல் நலத்தை பாதிப்பதோடு மன நலத்தையும் பாதிக்கிறது உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம், சிகிச்சை பெற்று
வருபவர்கள், அடிக்கடி தலைவலி
பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் போன்ற
நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள்
தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.மேலும் தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்

No comments:
Post a Comment