பழைய சாதம் குடிப்பதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம்…
வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு, நிம்மதியாக
கிடக்கலாம்!’ வெயில் காலத்தில், வேப்ப மரத்தடியில்
சர்வசாதாரணமாகக் கேட்கக் கூடிய பேச்சு இது. இது 100
சதவிகித உண்மை. ஏனென்றால், நீராகாரம் என்கிற
பழைய சாதத்தில் தான், அத்தனை சத்துகளும் இருக்கின்றன’
என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நம் முன்னோர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்தது
பழைய சாதம். காலையில் ஒரு முட்டி கஞ்சியை,
வெங்காயம், பச்சை மிளகாயோடு சேர்த்துக்
குடித்துவிட்டுதான், வயலுக்குப் போவார்கள்.
அவர்களுக்குத் தேவையான உடல் வலிமையையும்,
சத்தையும், அந்தப் பழையச் சோறுதான் கொடுத்தது.
இதுபற்றி ஆய்வாளர்கள் கூறும்போது,‘சாதத்தை
வடித்து, அதில் தண்ணீர் ஊற்றி வைத்தால், மறு நாள்
காலையில், அது பழைய சாதம். சாதத்தை அலுமினியம்,
மண், ஸ்டீல் என, பல்வேறு பாத்திரங்களில் வைத்து,
பின்னர் அதை ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை
செய்து பார்த்தோம். மண்பானை பழைய சாதத்தில்
தான், நல்ல தரமும் வாசமும் இருந்தது. சோற்றில்
தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊறவிடும் போது,
அதில் நுண்ணுயிர்கள் (லாக்டிக் ஆசிட் பாக்டீரியா)
வளர்கிறது. அதனால் தான், அதில் புளிப்புச் சுவை
ஏற்படுகிறது. நுண்ணுயிர்கள், வைட்டமின்களை
உருவாக்குவதால், ‘பி’ வைட்டமின்கள் அதிகரிக்கிறது.
புரதமும், மாவுச் சத்தும் (ஸ்டார்ச்), எளிதில்
செரிக்கப்படும் தன்மை பெறுகிறது. ஓர் இரவு
முழுவதும் ஊறுவதால், அதன் ஊட்டச் சத்துக்கள்
அதிகரிக்கப்படுவதுதான், அதன் சத்துக்குக் காரணம்
மேலும் தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்

No comments:
Post a Comment